வேதம் (திரைப்படம்)
அர்ஜுன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேதம் (Vedham) 2001 இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அர்ஜுன் மற்றும் சாக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், வினீத், திவ்யா உன்னி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் இப்படத்தின் இயக்குநர். படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இந்த படத்தில் உதவி இயக்குநர்களில் ஒருவராக நடிகர் விஷால் பணியாற்றினார்.[1] அர்ஜுன் தனது நிறுவனமான ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்தார்.
Remove ads
கதை
சஞ்சய் (வினீத்) மற்றும் அனிதா (திவ்யா உன்னி) ஆகியோர் கோயம்புத்தூரில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். ஆனால் விவாகரத்து பெறும் விளிம்பில் உள்ளனர். சஞ்சயின் நண்பரான விஜய் (அர்ஜுன்) நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்களை ஒன்றாக இணைக்க முடிவு செய்கிறார். விஜய் சஞ்சயின் வீட்டிற்குச் சென்று தம்பதியினருடன் சில வாரங்கள் தங்கியிருக்கிறார். அவர்களின் உரையாடல்களின் போது, விஜய் தனது மனைவி சீதா (சாக்ஷி), இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை பற்றி விவரிக்கிறார். மெதுவாக, சஞ்சய் மற்றும் அனிதா ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, விஜய் மற்றும் சீதாவைப் போன்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இறுதியாக விஜய் சொன்ன கதைகள் அனைத்தும் அவரது கற்பனை மட்டுமே என்பது தெரியவருகிறது. அது சஞ்சய் மற்றும் அனிதாவை ஊக்குவிக்கும் என்று விஜய் கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். உண்மையில், விஜய் சீதாவை காதலித்து வந்தாள். ஆனால் சீதா தற்செயலாக அவர்களது திருமணத்திற்கு முன்பே காலமானார். அதன்பின் விஜய் சீதாவின் நினைவுடன் வாழ்கிறார். இருப்பினும், சஞ்சய் மற்றும் அனிதா உண்மையை அறிந்து கொள்ளாமல் இருப்பதை அவர் உறுதி செய்கிறார். இறுதியில், சஞ்சய் மற்றும் அனிதா ஒன்றுபடுகிறார்கள். சஞ்சயின் பிரச்சினைகளைத் தீர்த்த திருப்தியுடன் விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு செல்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- விஜயாக அர்ஜுன்
- சீதாவாக சாக்ஷி சிவானந்த்
- பூஜாவாக மும்தாஜ்
- சஞ்சயாக வினீத்
- திவ்யா உண்ணி - அனிதா சஞ்சய் (குரல் பதி செய்தவர் ரேவதி )
- கோவிந்தசமியாக கவுண்டமணி
- செந்தில்
- மயில்சாமி
- சின்னி ஜெயந்த்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
ஒலித்தடம்
இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.[2] மலையாளத் திரைப்படமான சம்மர் இன் பெத்லஹேமில் இருந்த இசையமைப்பாளரின் சொந்த மலையாள பாடலான "ஓரு ராத்ரி கூடி" யிலிருந்து "மாலைக் காற்று" பாடல் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.[3] ஹரிஹரன் மற்றும் மகாலட்சுமி பாடி "மாலைக் காற்று தமிழ் பேசுதே" பாடல் நன்றாக உள்ளதாக இந்து நாளிதழ் எழுதியது. வைரமுத்து மற்றும் பா. விஜய் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
இல்லை. | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | ஏய் மீனலோச்சனி | சங்கர் மகாதேவன், ஸ்வர்ணலதா | பி.விஜய் |
2 | கொஞ்சிக் கொஞ்சிப் பேசி | எஸ்.பி.பாலசுப்ரமண்யம் | |
3 | மாலைக் காற்று | ஹரிஹரன், மகாலட்சுமி ஐயர் | வைரமுத்து |
4 | முதல் பூ | ஹரிஹரன், சுஜாதா | பி.விஜய் |
5 | ஓ அன்பே | சங்கர் மகாதேவன் | |
6 | உம்மா அய்யா | அன்னுபமா, ஸ்ரீராம் பார்த்தசாரதி |
வரவேற்பு
சிஃபி இணையதளத்தில், "அர்ஜுன் இயக்கியுள்ள வேதம் திரைப்படம் தூக்கத்தைத் தூண்டுகிறது. அர்ஜுன் தேசபக்தி, துப்பாக்கிகள் மற்றும் குறைவான உடையணிந்த பெண்கள் ஆகியோருடன் மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே அவர் - “என்றென்றும் காதலில் இருக்க வேண்டும்” என்னும் யோசனையை பரிசோதிக்க விரும்புகிறார். ஆனால் ஒரு ஒற்றைத் தலைவலியை உங்களிடம் விட்டுச்செல்லும் அளவுக்கு தாங்கமுடியாத திரைப்படத்தை உருவாக்கியுள்ளர்" என்று எழுதியது. இந்து நாளிதழ், "பொதுவாக தேசபக்தி தான் அர்ஜுனின் படங்களின் அடிப்படை கருப்பொருள். ஆனால் வேதத்தில் அவர் திருமணத்தின் புனிதத்தன்மையைப் பற்றியும் குடும்பத்தை மகிமை பற்றியும் அதிகம் பேசுகிறார். அவர் சொல்ல வரும் செய்தி சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறது - அதனால் இப்படம் முழுக்க போதனை திரைப்படமாக மாறுகிறது. திரைப்படத்தின் வேகம் கொஞ்சம் குறைவாக உள்ளது." என்று எழுதியது. படம் திரையரங்குளில் ஓரளவுக்கு ஓடியது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads