சாங்ச்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாங்ச்சன் (Changchun, எளிய சீனம்: 长春; மரபுவழிச் சீனம்: 長春; பின்யின்: Chángchūn) சிலின் மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமாகும். இது வடகிழக்கு ஆசியாவின் மைய நகரமும் ஆகும்.[5] சோங்லியோ சமவெளியின் மையத்தில் அமைந்துள்ள சாங்ச்சன் 7 மாவட்டங்களும் 1 கவுன்ட்டிகளும் 2 நாடு தழுவிய நகரங்களுமாக ஓர் துணை-மாகாண நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது.[6] 2010 கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 7,674,439. இதில் 5 மாவட்டங்களையும் 4 வளர்ச்சித் திட்டப்பகுதிகளையும் கொண்ட நகரியப் பகுதியின் (பெருநகரப் பகுதி) மக்கள்தொகை 3,815,270.[3] வடகிழக்குச் சீனாவில் இதுவே பெரிய தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் மற்றும் போக்குவரத்து மையமாக விளங்குகின்றது.
சாங்ச்சன் என்ற பெயர் சீனத்தில் "நீண்ட வசந்தம்" எனப் பொருள்படும். 1932க்கும் 1945க்கும் இடையே சாங்ச்சன் சிங்கிங் (Hsinking, எளிய சீனம்: 新京; பின்யின்: Xīnjīng; நேர்பொருளாக "புதிய தலைநகர்") என கைப்பற்றியிருந்த சப்பானியரால் பெயரிடப்பட்டிருந்தது. சப்பானியரின் ஆளுமைக்கு கீழமைந்த மஞ்சுகோ நாட்டின் தலைநகரமாக இருந்தது. 1949இல் சீனா நிறுவப்பட்ட பின்னர் 1954இல் சாங்ச்சன் சிலின் மாகாணத்தின் தலைநகரமாக நிறுவப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads