சாங்லா மாவட்டம்
பாக்கித்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாங்லா மாவட்டம் (Shangla District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அல்புரி நகரம் ஆகும். 1,586 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 5 தாலுகாக்களும்; 28 ஒன்றியக் குழுக்களும் கொண்டது. 1969 வரை சாங்லா மாவட்டப் பகுதிகள் சுவாத் இராச்சியத்தின் கீழ் இருந்தது.
Remove ads
அமைவிடம்
சாங்லா மாவட்டத்தின் வடக்கில் கோஹிஸ்தான் மாவட்டம், கிழக்கில் பட்டாகிராம் மாவட்டம் மற்றும் தோர்கர் மாவட்டங்களும், மேற்கில் சுவாத் மாவட்டம் மற்றும் தெற்கில் புனேர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.[2]
புவியியல்
இமயமலையில் மலைக்காடுகளால் சூழ்ந்த சாங்கலா மாவட்டத்தில் தேவதாரு, பைன் போன்ற மரங்கள் அதிகம் வளர்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 3000 மீட்டர் வரை உயரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் குஷ் கன்சால் எனுமிடத்தில் மிக உயரமான சிகரம் 3440 மீட்டர் உயரத்தில் உள்ளது.[2]
மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சாங்லா மாவட்ட மக்கள் தொகை 7,59,609 ஆகும். அதில் ஆண்கள் 3,86,082 மற்றும் பெண்கள் 3,73,508 ஆக உள்ளது. இம்மாவட்ட மக்களில் 98% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 33.13% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 96.97% விழுக்காட்டினர் பேசுகின்றனர்.[1]
தேசிய மற்றும் மாநில சட்டசபை தொகுதிகள்
இம்மாவட்டத்திலிருந்து தேசிய சட்டமன்றத்திற்கு ஒரு தொகுதியும்[3], கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றததிற்கு 2 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads