சாந்தி (திரைப்படம்)
ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தி (Santhi) 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மதம் 22 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும். 1968 ஆம் ஆண்டு இப்படம் இந்தியில் கௌரி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]
Remove ads
கதைச் சுருக்கம்
சிவாஜியும், எஸ். எஸ். ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ். எஸ். ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக கருதப்படுகிறார். எஸ். எஸ். ராஜேந்திரன் இறந்துவிட்டதாக கருதிவிட்ட சிவாஜி அதை எஸ். எஸ். ராஜேந்திரனின் மாமனாரிடம் சொல்லும்போது அந்த அதிரிச்சியில் அவர் இறந்துவிடுகிறார். எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரியும் இறந்து விடுவார் என அஞ்சிய, சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்பிய பிறகு இறந்ததாக கருதபட்ட எஸ். எஸ். ராஜேந்திரன் வந்து நிற்பார். இதனால் ஏற்படும் சிக்கல்களும், சங்கடங்களுமே அதன் முடிவுமே படத்தின் பிற்பகுதியாகும்.
Remove ads
வெளியீடு
கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
பாடல்கள்
இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் கண்ணதாசன் பாடல்கள் எழுத வெளியான திரைப்படமாகும்.[3]
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | நீளம் (நி: நொ) |
1 | "யார் அந்த நிலவு" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | 04:30 |
2 | "நெஞ்சத்திலே நீ" | பி. சுசீலா | 03:24 | |
3 | "ஊரெங்கும் மாப்பிள்ளை" | பி. சுசீலா | 04:21 | |
4 | "செந்தூர் முருகன்" | பி. சுசீலா | 03:38 | |
5 | "செந்தூர் முருகன் 2" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 04:55 | |
6 | "வாழ்ந்து பார்க்க வேண்டும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் | 03:53 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads