சானியா மிர்சா

இந்திய டென்னிசு வீராங்கனை From Wikipedia, the free encyclopedia

சானியா மிர்சா
Remove ads

சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.[5][6]

விரைவான உண்மைகள் நாடு, வாழ்விடம் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

சானியா மிர்சா 1986 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் ஐதராபாத் முஸ்லிம் பெற்றோர்களான இம்ரான் மிர்சா, நசீமா ஆகிய தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை பத்திரிகையாளர், தாய் அச்சு வணிகத்தில் பணிபுரிந்தார்.[7] இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது குடும்பம் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தது, அங்கு இவரும் தங்கை ஆனமும் சுன்னி முஸ்லீம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டனர். இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீனின் மகன் கிரிக்கெட் வீரர் முகமது அசாதுதீனை ஆனம் மணந்தார்.[8] இவர் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்டத் தலைவர்கள் குலாம் அகமது மற்றும் பாகிஸ்தானின் ஆசிப் இக்பால் ஆகியோரின் தூரத்து உறவினர் ஆவார்.[9] ஆறு வயது முதல் டென்னிசு விளையாடுகிறார். தனது தந்தை மற்றும் ரோஜர் ஆண்டர்சனால் பயிற்சி பெற்றார்.

ஐதராபாத்தில் உள்ள நாசர் பள்ளியில் பயின்றார். பின்னர் ஐதராபாத் புனித மேரி கல்லூரியில் பட்டம் பெற்றார். மிர்சா டிசம்பர் 11, 2008இல் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றார்.[10] டென்னிசு தவிர, மிர்சா கிரிக்கெட் மற்றும் நீச்சலிலும் சிறந்தவர்.

Remove ads

டென்னிசு வாழ்க்கை

2001-2003

சானியா மிர்சா தனது ஆறாவது வயதில் டென்னிசு விளையாடத் தொடங்கினார், 2003 இல் தொழில்முறை விளையாட்டில் ஈடுபட்டார். தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார். மிர்சா இளையோர் பிரிவில் 10 ஒற்றையர் மற்றும் 13 இரட்டையர் பட்டங்களை வென்றார். அவர் 2003 விம்பிள்டன் வாகையாளர் பெண்கள் இரட்டையர் பட்டத்தை, அலிசா கிளேபனோவாவுடன் இணைந்து வென்றார். அவர் 2003 யுஎஸ் ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சனா பாம்ப்ரியுடன் அரையிறுதி வரையிலும், 2002 யுஎஸ் ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதி வரையில் விளையாடினார்.

2004-2005

2004ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐதராபாத் ஓபன் தொடரில் நிக்கோல் பிராட்டிற்கு எதிராக சிறப்பாக விளையாடினார். ஆனால் மூன்று செட்களில் அந்தப் போட்டியில் தோல்வியடைந்தார். இதே தொடரில் லிசேல் ஹூபருடன் இணைந்து WTA இரட்டையர் பட்டத்தை வென்றார்.

Remove ads

விருதுகள், அங்கீகாரங்கள்

2014 ஆம் ஆண்டு தெலுங்கானா அரசு சானியா மிர்சாவை அம்மாநிலத்தின் விளம்பர தூதராக நியமித்தது.[18] டைம் இதழின் 2016 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பெயரிடப்பட்டார்.[19]

தனிப்பட்ட வாழ்க்கை

2009 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சோயப் மாலிக்குடன் சானியா மிர்சா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஏப்ரல் 2,2012இல் இசுலாமிய முறைப்படி ஐதராபாத்தில் சோயப் மாலிக்கை 6.1மில்லியன் (அமெரிக்க$137,500) செலவில் திருமணம் செய்தார்.[20] இவர்களின் வாலிமா விழா பாக்கித்தானின் சியால்கோட்டில் நடைபெற்றது [21]

இந்தத் தம்பதியினர் 23 ஏப்ரல் 2018 அன்று சமூக ஊடகங்களில் தங்கள் முதல் கர்ப்பத்தை அறிவித்தனர் [22][23] அக்டோபர் 2018 இல், சோயிப் மாலிக் டுவிட்டரில் மிர்சா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அறிவித்தார் மற்றும் அவருக்கு இசான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டார்.[24][25][26][27]

Remove ads

பிற செயல்பாடுகள்

2014 ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் நலன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திற்கான விளம்பரத் தூதராக மிர்சா இருந்தார்.[28]

மிர்சா ஐதராபாத்தில் டென்னிசு அகாதமியை நிறுவியுள்ளார்.[29] முன்னாள் உலக நம்பர் 1 மற்றும் பல கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர்களான காரா பிளாக் மற்றும் மார்டினா நவரதிலோவா இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அகாதமிக்கு வருகை தந்துள்ளனர்.[30]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads