சாமளாபுரம்
இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமளாபுரம் (ஆங்கிலம்:Samalapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
சாமளாபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருப்பூர் 16 கி.மீ.; மேற்கில் சூலூர் 17 கி.மீ.; வடக்கில் அவிநாசி 20 கி.மீ. ; தெற்கில் பல்லடம் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
21.75 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,938 வீடுகளும், 20,691 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads