சாயல்குடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாயல்குடி (Sayalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரம் ஆகும்.சாயல்குடி பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது இராமநாதபுரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது.இங்கு இருந்து 5 கி.மீ. தொலைவில் கடற்கரை உள்ளது.இது இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி ஜமீன் ஆட்சி செய்த பகுதியாகும்.இங்கு உள்ள சிவன்கோவில் கடல்பாறையால் கட்டப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த பேரூராட்சி 3,617 வீடுகளும், 14,801 மக்கள்தொகையும் கொண்டது.[4] இங்கு அன்னை பத்திரகாளி அம்மன் ஆலயம் சாயல்குடி சத்திரிய இந்து நாடார் உறவின்முறை மூலம் சிறப்பாக செயல்படுத்து வருகிறது
இது 12.20 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட சாயல்குடி பேரூராட்சியானது முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
Remove ads
அகழ்வாராய்ச்சி
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின் உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன. இரும்புத்தாது, உடைந்த பானையின் ஓடுகள், குறியீடுள்ள பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன தாய்த் தெய்வ பொம்மை, கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. உடமைக்குறி என நம்பப்படும் அடையாளங்களுடன் சில ஓடுகளும் கிடைத்துள்ளன.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads