சாரசு கொக்கு

From Wikipedia, the free encyclopedia

சாரசு கொக்கு
Remove ads

போதா அல்லது சாரசு கொக்கு, சரச பெருங்கொக்கு (Sarus Crane, சாரஸ் கொக்கு, Grus antigone) என்பது இக்காலத்திலே இந்தியாவில் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும். இந்தப் பறவைதான், பறக்கக்கூடிய பறவைகளில் மிகவும் உயரமானது. உலகின் உயரமான பறவையான நெருப்புக்கோழியால் பறக்க முடியாது என்பது குறிப்பிடத் தக்கது. இது உத்திரப்பிரதேச மாநிலப்பறவையாகும்.

விரைவான உண்மைகள் சாரசு கொக்கு, போதா Sarus Crane, காப்பு நிலை ...
Thumb
Grus antigone
Remove ads

தோற்றம்

நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம் வரை வளரக்கூடும். இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும் பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை இருக்கும்.

Remove ads

பழக்கவழக்கங்கள்

மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள் அனைத்துண்ணிகள். பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. சூலை – அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், மழைக்குப் பிறகு இவை இணை சேருகின்றன, பின்னர் ஆகத்து – செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் முட்டையிடக்கூடியன. இவை பெரும்பாலும் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு அருகே தரையிலேயே கூடு கட்டி முட்டையிடுகின்றன. இவை நான்கைந்து முட்டைகள் இடும் என்றாலும்,அவற்றில் இரண்டு அல்லது மூன்று மட்டுமே குஞ்சு பொரிக்கும். ஆண், பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இணையைக் கவர்வதற்காக இவை கொடுக்கும் அழைப்புகளும் நடனமும் உலகப் புகழ்பெற்றவை. இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன. இணை சேரும் காலம் தவிர்த்து இந்தப் பறவைகள் 10 அல்லது 15 கொண்ட குழுவாகத் திரியும்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads