சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Salak Selatan Komuter Station; மலாய்: Stesen Komuter Salak Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
சாலாக் விரைவுச்சாலை
-இன் எதிர்ப்புறமாக, சாலாக் செலாத்தான் நகரில் இருந்து 400 மீட்டர் தெற்கே இந்த நிலையம் அமைந்துள்ளது.
Remove ads
பொது
சிரம்பான் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் முதன்மையாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் நான்கு தொடருந்து பாதைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த நிலையத்தில், வடக்கு அல்லது தெற்கு செல்லும் பயணிகளுக்கு இரண்டு நடைபாதைகள் மட்டுமே உள்ளன. இரண்டு வெளிப்புறப் பாதைகளால் நடைபாதைகள் சேவை செய்யப்படுகின்றன.
அதே வேளையில், நிலையத்தில் நடுவில் உள்ள இரண்டு தடங்கள், நிலையத்தில் நிற்காத தொடருந்துகளுக்கான மாற்றுவழி தடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.[2]
Remove ads
இலகுத் தொடருந்து நிலையம்
SP15 சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம், இந்த சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில், மிக அருகில் அமைந்துள்ளது.
அடுத்த நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், சாலையின் வழியாகத்தான் பயணிகள் நடந்து செல்ல வேண்டும். இரண்டு நிலையங்களும் மிக அருகில் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads