செபுத்தே கொமுட்டர் நிலையம்

From Wikipedia, the free encyclopedia

செபுத்தே கொமுட்டர் நிலையம்
Remove ads

செபுத்தே கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Seputeh Komuter Station; மலாய்: Stesen Komuter Seputeh) என்பது மலேசியா, கோலாலம்பூர், செபுத்தே பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் மிட் வெளி Seputeh, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தின் மற்றொரு வழித்தடமான புலாவ் செபாங் வழித்தடத்தில் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது.

Remove ads

பொது

இந்த நிலையம் முன்பு 1999-ஆண்டு தொடங்கி, மிட் வேலி மெகாமால் மற்றும் மிட் வெளி சிட்டி எனும் வணிகப் பகுதியுடன் இணைக்கப்பட்ட ஒரே தொடருந்து நிலையமாக இருந்தது.[2]

இருப்பினும் 2004-இல், புதிய மிட் வேலி நிலையம் திறக்கப்பட்டதும், மிட் வேலி வணிக மையத்திற்கு மிட் வேலி நிலையமே நேரடியாகச் சேவை செய்கிறது. செபுத்தே கொமுட்டர் நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் செபுத்தே நகரத்திற்கான முக்கியத் தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.

அடிப்படை வசதிகள்

செபுத்தே நிலையத்தில் உள்ள வசதிகள் மற்ற நிலையங்களைப் போலவே உள்ளன. இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகள், டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், தொட்டு செல் வசதிகள் உள்ளன.[3]

மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாகப் பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. மற்ற கொமுட்டர் நிலையங்களைப் போலவே, தினமும் காலை 6.30 முதல் இரவு 8.30 வரையில் இந்த நிலையம் சேவை செய்கிறது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads