கிள்ளான் மாவட்டம்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிள்ளான் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Klang; ஆங்கிலம்: Klang District; சீனம்: 巴生县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா லங்காட் மாவட்டம்; கிழக்கில் பெட்டாலிங் மாவட்டம்; ஆகிய மூன்று மாவட்டங்கள் அமைந்து உள்ளன.[2]
மேற்கே மலாக்கா நீரிணை; 53.75 கி.மீ. அளவிற்குக் கடற்கரை பகுதியைக் கொண்டு உள்ளது.
Remove ads
பொது
இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கிள்ளான் (Klang City). மற்ற நகரங்கள் கிள்ளான் துறைமுகம், பண்டமாரான், காப்பார், மேரு மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான்.
கிள்ளான் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோலா கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் முடிவு அடைகின்றது. மேலும் இந்த மாவட்டத்தின் கடல் பகுதிகளில் கிள்ளான் தீவு; இண்டா தீவு; செட் மாட் ஜின் தீவு; நண்டு தீவு; தெங்கா தீவு; ரூசா தீவு; செலாட் கெரிங் தீவு; பிந்து கெடோங் தீவு போன்ற தீவுகள் உள்ளன.
இந்த மாவட்டம் கிள்ளான் மற்றும் காப்பார் என இரண்டு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
Remove ads
மக்கள் தொகையியல்
2010-ஆம் ஆண்டு, கிள்ளான் மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய இனக் குழுக்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்:
மலாய்க்காரர்கள்: 376,606 - 43.73%
சீனர்கள்: 225,425 - 26.18%
இந்தியர்கள்: 165,382 - 19.2%
இதர பூமிபுத்திராக்கள்: 12,620 - 1.47%
மற்றவர்கள்: 4,179 - 0.49%
மலேசியர்கள் மொத்தம்: 784,212 - 91.06%
மலேசியர்கள் அல்லாதவர்கள்: 76,977 - 8.94%
மொத்தம்: 861189 - 100.00%[3]
மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads