சிகார்பூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிகார்பூர் மாவட்டம் (Shikarpur district), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் லர்கானா கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிகார்பூர் நகரம் ஆகும். சிகார்பூர் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான வடகிழக்கே 505 கராச்சிக்கு கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 989கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
Remove ads
மாவட்ட எல்லைகள்
லர்கானா கோட்டத்தில் அமைந்த சிகார்பூர் மாவட்டத்தைச் சுற்றிலும் லர்கானா மாவட்டம், ஜோகோபாபாத் மாவட்டம், கைப்பூர் மாவட்டம் மற்றும் சுக்கூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
சிகார்பூர் நகரத்தின் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலை எண்கள் 55 & 45 பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் சந்திப்பு மையமாக உள்ளது.
மாவட்ட நிர்வாகப் பிரிவுகள்
சிகார்பூர் மாவட்டம் கர்கி யாசின், கான்பூர், லக்கி மற்றும் சிகார்பூர் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. [2]
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 214,824 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,386,330 ஆகும்[3] . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102.20 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 43.70% ஆகும்[4][5]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 514,189 (37.09%) ஆக உள்ளனர்.[6]நகர்புறங்களில் 318,738 (22.99%) மக்கள் வாழ்கின்றனர். [4]
சமயம்
இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 98.21% மக்களும், இந்து சமயம், கிறித்துவம் போன்ற சிறுபான்மைச் சமயங்களை 0.79% மக்களும் பின்பற்றுகின்றனர்.[7]
மொழி
இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 97.14% மக்களும், பிராகுயி மொழியை 1.29% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.57% மக்களும் பேசுகின்றனர்.[8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads