2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2023 Census of Pakistan), இது பாக்கித்தான் நாட்டின் 7வது கணக்கெடுப்பு ஆகும்.[1][2][3]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானி புள்ளியியல் அமைப்பால் 1 மார்ச் 2023 முதல் 31 மே 2023 வரை மேற்கொள்ளப்பட்டது.[4]இக்கணக்கெடுப்பு பாகிஸ்தானில் முதன்முறையாக மின்னணுக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.[5][6][7][8]
இக்கணக்கெடுப்பின் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளான கில்ஜிட்-பல்டிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் தவிர்த்து பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,14,92,917 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.[9][10]
2017 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55% உயர்ந்துள்ளது.[11]1998 மற்றும் 2017 கணக்கெடுப்புகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.38% ஆக இருந்தது.
6 மே 2023 அன்று பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,18,31,019 ஆக உள்ளது. இது 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 28.6 மில்லியன் கூடுதல் ஆகும்.[12]
பாகிஸ்தான் மக்கள்தொகையில் கிராமப்புற மக்கள் தொகை 61.18% மற்றும் நகர்புற மக்கள் தொகை 38.82% ஆக உள்ளது.[13]
இஸ்லாமாபாத் உள்ளிட்ட, ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் பகுதிகள் சேர்க்கப்படாத பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23,86,59,411 ஆகும். இதுவே 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 213.2 மில்லியன் ஆக இருந்தது.[14]
23 மே 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியல் அமைப்பு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் சேர்த்து (கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் தவிர்த்து) பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 24,95,66,743 ஆக உள்ளது.
Remove ads
மாகாணங்கள் வாரியாக மக்கள் தொகை
- பஞ்சாப் மாகாணம் -12,76,88,922
- சிந்து மாகாணம் -5,56,96,147
- கைபர் பக்துன்வா மாகாணம் - 4,08,56,097
- பலூசிஸ்தான் மாகாணம் - 1,48,94,402
- இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் - 23,63,863
- கில்ஜித் & பல்திஸ்தான் - 14,92,924
- ஆசாத் காஷ்மீர் - 40,45,367
சமயங்கள் வாரியாக மக்கள் தொகை
- முஸ்லீம்கள் - 23,16,86,709 (96.35%)
- இந்துக்கள் - 52,17,216 (2.17%)
- கிறித்துவர்கள் - 33,00,788 (1.37%)
- அகமதியாக்கள் - 1,62,684 (0.07%)
- சீக்கியர்கள் - 15,998 (0.006%)
- சொராட்டிரியர்கள் - 2,348 (0.002%)
- பிறர் (பகாய், கலாஸ், பௌத்தர்கள், யூதர் உள்ளிட்டவர்கள்) - 72,346 (0.03%)
மொழிகள் வாரியாக மக்கள் தொகை
- பஞ்சாபி மொழி - 36.98%
- பஷ்தூ மொழி -18.15%
- சிந்தி மொழி - 14.31%
- சராய்கி மொழி -12%
- உருது - 9.25%
- பலூச்சி மொழி - 3.38%
- இந்த்கோ மொழி - 2.32%
- பிராகுயி மொழி -1.16%
- மேவாதி மொழி- 0.46%
- கோகிஸ்தானி மொழி - 0.43%
- காசுமீரி மொழி 0.11%
- சினா மொழி Shina- 0.05%
- பால்டி மொழி - 0.02%
- கலாஸ் மொழி - 0.003%
- பிற மொழிகள் - 1.38%
கணக்கெடுப்பு முடிவுகள்
5 ஆகஸ்டு 2023 அன்று பாகிஸ்தான் புள்ளியியல் அமைப்பின் கணக்கெடுப்பு முடிவுகளுக்கு பாகிஸ்தான் அரசு அங்கீகாரம் வழங்கியது.[9] கணக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் தொகை 241.49 மில்லியன் ஆக உயர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.55% ஆக உயர்ந்து காணப்பட்டது. பாகிஸ்தானின் ஊரகப் பகுதி மக்கள் தொகை 61.18% ஆகவும்; நகர்புற மக்கள் தொகை 38.82% ஆகவும் உள்ளது.[9]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads