சிங்கம்பட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia

சிங்கம்பட்டிmap
Remove ads

சிங்கம்பட்டி (Singampatti) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4][5]

விரைவான உண்மைகள்
Remove ads

சிங்கம்பட்டிப் பாளையம்

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஜயநகரத்தின்கீழ் மதுரை ஆட்சியாளர்களாக இருந்த வந்த விசுவநாத நாயக்கர் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், இறையாண்மை பெற்ற ஆட்சித் தலைவர்களாக ஆயினர். பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக கி.பி 1433-ல் மாற்றியமைத்தார்கள். அப்போதுபிறந்ததுதான் சிங்கம்பட்டி பாளையம். .விஸ்வநாத நாயகர் மதுரையைச் சுற்றி புதியதாக கோட்டை அமைத்தார். அதில் அமைக்கப்பட்ட 72 கொத்தளங்களில் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையில் விடப்படன.[6] விஸ்வநாத நாயக்கர் சிங்கம்பட்டி பாளையக்காரருக்கு ‘தென்னாட்டுப் புலி’ என்ற பட்டத்தை அளித்தார். சிங்கம்பட்டி பாளையத்தின் அடையாளமாக இன்றும் உள்ளது சிங்கம்பட்டி அரண்மனை[7] ஆகும்.. இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது. ஆடி அமாவாசையும் அதற்கு அடுத்த நாளும் நடக்கும் திருநாட்களில் சிங்கம்பட்டி பாளைய மன்னர் மரபின் வாரிசு மன்னர் உடையுடன் சொரிமுத்து அய்யனார் கோயில் தர்பாரில் பொதுமக்களுக்குத் தரிசனம் அளிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. [8]

Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads