பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இக்கட்டுரை பாளையம் என்னும் ஆட்சி நிர்வாக முறையைப் பற்றியது
பாளையம் என்பது தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்க அரசாக உருவாக்கினார். விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர நிர்வாக முறையைத் தழுவி அமைத்த பாளையப்பட்டு எனும் புதிய முறை ஆகும். இம்முறையின் கீழ் மதுரையை மையமாகக் கொண்டு மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.
Remove ads
பாளைய முறை
"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்.இன்றைய தெலங்கானாவில் இப்பொழுது வாரங்கல் என அழைக்கப்படும் ஓருகல்லைத் தலைநகராகக் கொண்ட காகதிய அரசால் பாளைய முறை ஏற்படுத்தப்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். விஜயநகர பேரரசர்களில் முக்கியமான அரசரான குமார கம்பனன் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்தார்.கேரளா , ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு என்று துங்கபத்ரா ஆற்றுக்குத் தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த பேரரசை ஏற்படுத்தினார். விஜயநகர அரசு விரிந்து பரந்திருந்ததால் பேரரசை பாளையம் எனும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார். இம்முறையின்படியே பின்னாளில் விசுவநாத நாயக்கர் 72 பாளையங்களாக நாட்டைப் பிரித்து மதுரையை தலைநகராக கொண்டு மதுரை நாயக்கர் அரசை ஏற்படுத்தினார். இது பின்னாளில் 200 பாளையங்கள் வரை பிரிக்கப்பட்டன.
Remove ads
பாளையங்களின் பட்டியல்[சான்று தேவை]
- அம்மையநாயக்கனூர்
- அத்திப்பட்டி
- அழகாபுரி
- ஆய்க்குடி
- ஆற்றங்கரை
- இளசை
- இரசக்கயனூர்
- இலக்கையனூர்
- இடையக்கோட்டை
- இராமகரி
- உதயப்பனூர்
- ஊற்றுமலை
- ஊர்க்காடு
- எட்டையபுரம்
- ஏழுமலை
- ஏழாயிரம் பண்ணை
- கடலூர்
- கல்போது
- கன்னிவாடி
- கம்பம்
- கண்டமனூர்
- கவுண்டன்பட்டி
- கடம்பூர்
- காமநாயக்கனூர்
- காடல்குடி
- காசையூர்
- குமரவாடி
- குளத்தூர்
- குருவிகுளம்
- கூடலூர்
- கொல்லப்பட்டி
- கொல்லங்கொண்டான்
- கோலார்பட்டி
- கோட்டையூர்
- கோம்பை
- சந்தையுர்
- சக்கந்தி
- சமுத்தூர்
- சேத்தூர்
- சிவகிரி
- சிங்கம்பட்டி
- சுரண்டை
- சொக்கம்பட்டி
- தலைவன்கோட்டை
- தேவாரம்
- தொட்டப்பநாயக்கனூர்
- தோகைமலை
- தும்பிச்சிநாயக்கனூர்
- படமாத்தூர்
- பாஞ்சாலங்குறிச்சி
- பாவாலி
- பெரியகுளம்
- போடிநாயக்கனூர்
- ரோசலைப்பட்டி
- வடகரை
- வாராப்பூர்
- விருப்பாட்சி
- வெள்ளிக்குன்றம்
- விரமலை
- நத்தம்
- நடுவக்குறிச்சி
- நாகலாபுரம்
- நிலக்கோட்டை
- நெற்கட்டும் செவல்
- மணியாச்சி
- மருங்காபுரி
- மன்னார்கோட்டை
- மலைப்பட்டி
- மருதவானையூர்
- முதுவார்பட்டி
- முல்லையூர்
- மேல்மாந்தை
Remove ads
ஆதாரம்
- டாக்டர் ஜே. தியாகராஜன் எழுதிய “தமிழக வரலாறு” பக்கம்-61.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads