விசுவநாத நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவர் ஆவார்.[1] இவர் கிருஷ்ணதேவராயரின் படைதளபதியான நாகம நாயக்கரின் மகனாவார். இவர் பலிஜா சாதியின் கரிகாபதி குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2] இவரது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதிகள் உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. இவர் 72 பாளையங்களை உருவாக்கினார் . அவை 1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன.
Remove ads
15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்மண்டலங்களில் ஒன்றான மதுரைக்கு அரசப்பிரதிநிதியாக இருந்தவர் விசுவநாத நாயக்கர்.விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவர் மதுரையின் ஆட்சியாளரானார். மதுரையில் நாயக்கர் வம்சத்தினை நிறுவியவர் இவரே ஆவார். விசுவநாத நாயக்கரின் போர்படையை வழிநடத்தியவர் ஆரியநாத முதலியார்.இவர் விசுவநாத நாயக்கரின் படையை வழிநடத்தியதோடு,அதனை இரண்டாவது சிறந்த தளபதியாக(போருக்கு அனுப்பப்படும் சிறந்த படைப்பிரிவு) ஆக்கியதோடு பின்னாளில் தென்னிந்தியாவில் பல பகுதிகளை ஆட்சியைப் பிடித்தார்.விசுவநாத நாயக்கருக்குப் பின் அவரது மகனான கிருஷ்ணப்ப நாயக்கர்,இவர் தந்தையது திறமையான மந்திரியான ஆரியநாதனுடன் இணைந்து,மதுரை இராச்சியத்தை,நாயக்கர் ஆட்சியின் கீழ் விரிவுபடுத்தி,பண்டைய பாண்டியர் ஆட்சிப்பகுதியையும் மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.[3]
Remove ads
வரலாறு

இவர் விஜயநகர சாம்ராச்சியத்தில் கிருஷ்ணதேவராயரின் வெற்றிகரமான தளபதி நாகம்ம நாயக்கரின் மகனாவார்.14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ ஆட்சியாளரான வீரசேகர சோழர் மதுரையை ஆக்கிரமித்து பாண்டிய மன்னர் சந்திரசேகர பாண்டியனைப் பதவிநீக்கம் செய்தார்.இந்த பாண்டிய மன்னர் விஜயநகர பாதுகாப்பில் இருந்தார்.[3] அதோடு அவர் விஜயநகர பேரரசிடம் முறையிட்டதன் பேரில், நாகம்ம நாயக்கரின் கீழ் பாண்டியருக்கு உதவியாக ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாகம்ம நாயக்கர் வீரகேசசோழனை வீழ்த்தி மதுரை அரியணையைக் கைப்பற்றினார்.விஜயநகர சக்கரவர்த்தி யாராவது ஒருவர் இச்சிக்கலைச் சரிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது,நாகம்ம நாயக்கரின் சொந்த மகனான விசுவநாத நாயக்கர் முன்வந்தார்.மன்னர் விசுவநாதநாயக்கரோடு,கிளர்ச்சியாளருக்கு எதிராக ஒரு படையையும் அனுப்பிவைத்தார்.அதன்படியே அவர் தனது தந்தையை விஜயநகர சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார்.இந்த விசுவாசத்தின் வெகுமதியாகவே மன்னர், விசுவநாத நாயக்கரை மதுரை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மன்னராக நியமித்தார். மதுரையில் நாயக்க மன்னர்கள் ஆட்சி உருவானது..(1529).[3] நாயக்க மன்னர்கள் அன்னிய சுல்தான்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவின் தென்மண்டலங்களை பாதுகாத்தனர்.[4]
Remove ads
திரைப்படம்
தாசரி நாராயண ராவ் எழுதி இயக்கிய விசுவநாத நாயக்குடு என்கிற தெலுங்கு திரைப்படம் விசுவநாத நாயக்கரின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads