சிசாபங்மா

உலகின் 14வது உயரமான மலை இமயமலையில் அமைந்துள்ளது From Wikipedia, the free encyclopedia

சிசாபங்மா
Remove ads

சிசபங்மா உலகின் 14 ஆவது உயரமான மலையும், எண்ணாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தைக் கொண்ட மலைகளுள் உயரம் குறைந்ததும் ஆகும். இது 8013 மீட்டர் (26,289 அடிகள்) உயரம் கொண்டது. இது முழுதாகவே சீனாவுக்குள் இருப்பதும், 1950 களிலும் அதற்குப் பின்னரும் இப் பகுதிக்குள் செல்வதற்குச் சீனா தடை விதித்திருந்ததாலும், வெளிநாட்டவர்கள் இதில் ஏறும் முயற்சியில் இறங்க முடியாதிருந்தது. இதனால் எண்ணாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்ட மலைகளுள், உச்சியை அடைவதில் கடைசியாக வெற்றிபெற்ற மலையும் இதுவே.

விரைவான உண்மைகள் Shishapangma, உயர்ந்த புள்ளி ...

திபேத்திய மொழியில் இதன் பெயர் "புல் சமவெளிகளுக்கு மேலுள்ள உச்சி" என்னும் பொருள் தருவது. இம் மலை தென்-நடுத் திபேத்தில், நேபாளத்துடனான எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 8,000 மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளுள் முழுவதுமாகச் சீனாவுக்குள் இருக்கும் மலை இது மட்டுமே.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads