சித்திரகுப்தர்

From Wikipedia, the free encyclopedia

சித்திரகுப்தர்
Remove ads

சித்திரகுப்தர் (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) இந்து சமயத்தில் உள்ள கடவுளாவார். பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். தமிழ்நாட்டின் கருணீகர் மற்றும் வட இந்தியாவின் காயஸ்தர் இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்தர் விளங்குகின்றார்.

Thumb
சித்ரகுப்தர்
Remove ads

சொல்லிலக்கணம்

சிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவன் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்று அழைக்கப்படுகிறார்.[1]

புராணக் கூற்றுக்கள்

மரணக் கடவுளான இயமன் தான் கொல்ல நினைப்பவர்களின் விபரங்களினைப் பற்றிய தெளிவான கருத்துக்களெதுவும் இல்லாத காரணத்தினால் பிரம்மாவிடம் தனது கஷ்டகாலத்தினை விளக்குகின்றார், அச்சமயம் அங்கு தோன்றும் சிவன் சித்திரகுப்த மகாராஜாவினை இப்பணிக்கு அமர்த்துகின்றார். சித்திரகுப்தனாரும் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை ஆகாஷிக் குறிப்புகள் என அழைப்பர்.

Remove ads

சித்திரகுப்தரின் பிறப்பு

சித்திரகுப்தரின் பிறப்பு பற்றி பலவகையிலும் கூற்றுக்கள் உண்டு; அவற்றுள் ஒரு கூற்றின்படி பிரம்மா மனிதர்களுள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என நான்கு பிரிவுகளினை ஏற்படுத்துகின்றார். பின்னர் யமன் தனக்குள்ள பணிச்சுமைகளினைப் பற்றி பிரம்மாவிடம் முறையிட மையினை உடைய கிண்ணத்தினை ஒரு கையிலும் சிறகால் ஆன எழுதுகோலினை மறு கையிலும் ஏந்தியவாறு தோன்றுகின்றார் சித்திரகுப்தனார். இவர் தோன்றியதன் பின்னரே கயஷ்தா என்ற ஜந்தாவது ஜாதியும் தோற்றம் பெற்றது.

இன்னொரு கூற்றின்படி பார்வதி வரைந்த ஓவியத்தின் மீது சிவன் ஊதிய காரணத்தினால் இவர் தோற்றம் பெற்றிருப்பதாகவும் ஒரு கூற்று.

சித்திரகுப்தருக்கான கோயில்கள்

தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஷித்ரகுப்தர், யமன், ப்ரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நுழைவுவாயில் உள்ள மன்மதன் ரதி பிரகாரம் அருகே எமதர்மராஜாவுடன் சித்ரகுப்தர் ஒரு தூணில் காட்சியளிக்கின்றார்.

Remove ads

நம்பிக்கைகள்

  • உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்திர புத்திர நாயனார்தான் என்பது இந்து சமய நம்பிக்கையுடையவர்களின் நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்பதும் இந்து சமயத்தவர்களின் நம்பிக்கை.
  • நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது ஜோதிடங்களில் ஆர்வமுடையவர்களின் நம்பிக்கை.
Remove ads

இவற்றையும் காண்க

  1. நரகம்
  2. எமன்
  3. பாவம்
  4. புண்ணியம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads