சித்திரம் பேசுதடி (2021 தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்திரம் பேசுதடி என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 19, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரின் கதை கவிதபாரதி என்பவர் இயக்க, தீபிகா ரங்கராஜ்,[3] ஷிவ் சதிஷ் மற்றும் பாபூஸ் பாபுராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

விரைவான உண்மைகள் சித்திரம் பேசுதடி, வகை ...

இத தொடர் சமூகத்தில் நடக்கும் பாலின சார்பு மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற பிரச்சினைகளை மையமாக கொண்டது தயாரிக்கப்பட்டுள்ளது.[4] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 12 நவம்பர் 2022 அன்று ஒளிபரப்பப்பாகி, 477 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதை சுருக்கம்

குருமூர்த்தி (பாபுராஜ்) என்ற ஒரு காவல் அதிகாரி தனக்கு மகன் பிறக்காத காரணத்தால் தனது மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். தனி ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் வாழ்ந்து தனது பெண் பிள்ளைகளை வளர்க்கும் தாய் கோமதி. தந்தையை பழி வாங்க ஐ.பி.எஸ் உயர் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் தங்கமயில் (தீபிகா ரங்கராஜ்) என்ற பெண், ஆனால் விதி அவருக்கு கீழ் பணி செய்யவேண்டிய சூழ்நிலை. அதையும் தாண்டி தனது லட்சியத்தில் வென்று காதலன் ஆன ஜீவாவையும் எப்படி கரம் பிடித்தால் என்பது தான் கதை.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • தீபிகா ரங்கராஜ் - தங்கமயில்
  • ஷிவ் சதிஷ் - ஜீவா
  • பாபூஸ் பாபுராஜ் - குருமூர்த்தி

தங்கமயில் குடும்பத்தினர்

  • ஜெயஶ்ரீ (முன்பு) / கரோலின் ஹில்ட்ரட் (தற்போது) - கோமதி (தாய்)
  • ஷெரின் ஜானு - மலர் (அக்கா)
  • அபிநயா[5] - கயல் (இரண்டாவது சகோதரி)

ஜீவா குடும்பத்தினர்

  • அசோக் பாண்டியன் - ராஜசேகர் (தந்தை)
  • தரணி - பவானி (தாய்)
  • அனில் நேரெட்மில் - கார்த்திக் (மூத்த சகோதரன்)
  • சாய் லதா - இசை (சகோதரி)
  • சுவேதா சுப்பிரமணியம் - காயத்ரி (கார்திக்கின் மனைவி, கோபி மற்றும் மதுவதந்தியின் சகோதரி)

மதுவதந்தி குடும்பத்தினர்

  • சுவேதா - மதுவதந்தி (கயாத்திரியின் சகோதரி)
  • தசாரதி - நாட்ராயன் (தந்தை)
  • ஷீலா (முன்பு) / ஐஸ்வர்யா (தற்போது) - மல்லிகா நாட்ராயன் (தாய்)
  • ஐயப்பன் - கோபி (மூத்த சகோதரன், மலரின் காதலன்)

துணை கதாபாத்திரம்

  • பூஜா ராம்கி - தேனு (தங்கமயிலின் நண்பி)
  • விசாலாட்சி மணிகண்டன் - தங்கம் (குருமூர்த்தியின் இரண்டாவது மனைவி)
Remove ads

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads