சித்ராங்கி (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்ராங்கி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணியின் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா, ஆர். எஸ். மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கு. மா. பாலசுப்பிரமணியம், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, பொன்னுசாமி, ரத்னமாலா ஆகியோர் பாடியிருந்தனர்.
Remove ads
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
உதயகிரி நாட்டின் மன்னனுக்கு ஒரு தம்பி (ஏ.வி.எம்.ராஜன்), முடிக்குரியவன். ஆட்சியைப் பிடிக்கச் சதியில் ஈடுபடும் நாட்டின் தானைத் தலைவர் (ஆர். எஸ். மனோகர்). வெளியூருக்குச் செல்லும் இளவரசன் வழியில் விபத்து ஒன்றைச் சந்திக்கிறான். இளவரசனைக் காப்பாற்றித் தன் வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள் ஓர் ஏழைப் பெண் (புஷ்பலதா). இருவருக்கும் இடையில் காதல் வளருகிறது. இளவரசனை யார் என்றறியாது அவனைத் திருமணம் புரிகிறாள். முதலிரவு முடியும் முன்னரே இளவரசன் அவளைத் தனியே விட்டுச் செல்கிறான். தனது கணவனைத் தேடிச் செல்லும் புஷ்பலதா கடைசியில் ஒரு நாட்டின் மன்னனாக தனது கணவனைக் காண்கிறாள். பல இடையூறுகள், கஷ்டங்களுக்குப் பின்னர் இருவரும் இணைகின்றனர்.
Remove ads
இடம்பெற்ற பாடல்கள்
- நெஞ்சினிலே நினைவு முகம் (பாடியோர்: டி.எம்.எஸ், பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, இயற்றியவர்: கு. மா. பாலசுப்பிரமணியம்)
- இன்று வந்த சொந்தமா இடையில் (பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்)
- பொழுது புலர்ந்தது பூப் போலே பூமி வெளுத்தது (பி. சுசீலா)
- வேலோடு விளையாடும் (பி. சுசீலா, ராகம்: ஆபேரி)
- அன்ன நடை சின்ன இடை எப்படி (கே. ஜமுனா ராணி இயற்றியவர்: வாலி இசையமைப்பு: வேதா)
- ஒய்யாரி பாமா உனக்காக மாமா (எஸ். வி. பொன்னுசாமி ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் குழுவினர் இசையமைப்பு: வேதா)
- ரோஜாப்பூக் கன்னத்திலே தேன் பாயும் ராஜாத்தி கண்களிலே மீன் பாயும் (கே. ஜமுனா ராணி இசையமைப்பு: வேதா)
- உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு இருக்குது மனசு (திருச்சி லோகநாதன் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பு: வேதா)
Remove ads
உசாத்துணை
- blast from the past, Chitrangi (1964), ரண்டோர் கை, த இந்து, ஜூலை 16, 2010 - (ஆங்கில மொழியில்)
வெளி இணைப்புகள்
- சித்திராங்கி திரைப்படம் இணையத்தில் பார்க்க
- சித்திராங்கி திரைப்படப் பாடல்கள் கேட்க
- நெஞ்சினிலே நினைவு முகம் பாடல் வரிகள்
- நெஞ்சினிலே நினைவு முகம்
- இன்று வந்த சொந்தமா இடையில்
- பொழுது புலர்ந்தது பூப் போலே பூமி வெளுத்தது
- வேலோடு விளையாடும்
- அன்ன நடை சின்ன இடை எப்படி
- ஒய்யாரி பாமா உனக்காக மாமா
- ரோஜாப்பூக் கன்னத்திலே தேன் பாயும்
- உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு இருக்குது மனசு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads