வேதா (இசையமைப்பாளர்)
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். வேதா (Vedha) எஸ். எஸ். வேதாசலம் தமிழ்த் திரைப்படத்துறையின் ஓர் இசையமைப்பாளர்.[1] மர்ம வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த வேதா, ஆரவல்லி, பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி, சி.ஐ.டி.சங்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் 1950 களின் முற்பகுதியில் சென்னையில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.[1] பின்னர் இவர் முக்கியமாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றினார். 1952 முதல் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் தீவிரமாக இருந்தார்.
மாடர்ன் தியேட்டர்சு தயாரித்த பல படங்களுக்கு இவர் இசையமைத்தார். இந்தித் திரைப்படப் பாடல்களை தமிழ்ப் பாடல்களாக மாற்றியமைப்பதில் இவர் பிரபலமாக அறியப்பட்டார்.
Remove ads
தொழில் வாழ்க்கை
திரைப்படங்களில் இசை இயக்குநர்களுக்கு உதவுவதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1955 இல் வெளிவந்த மேனகா திரைப்படத்தில் டி. ஜி. லிங்கப்பா, சி. என். பாண்டுரங்கன் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராக இருந்தார்.
1956இல் வெளிவந்த மர்ம வீரன் என்ற திரைப்படம் தான் இவர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய முதற் திரைப்படம். இப்படத்தில் ஆர். பாலசரஸ்வதி தேவி பாடிய 'துடிக்கும் வாலிபமே என்ற பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது. வழக்கமாக ஆர். பாலசரஸ்வதி தாலாட்டுப் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்றவர், ஆனால் இப்பாடல் சிருங்காரம் என்று அழைக்கப்படும் காதல் நிறைந்த பாடலாகும்.
1958 இல் மணமாலை திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பாடிய நடக்காது ஜம்பம் பலிகாடு என்ற பாடல் நீண்ட காலமாக இலங்கை வானொலியில் பிரபலமான பாடலாக இருந்தது.
அதே ஆண்டில் மற்றொரு படத்திற்கு இசையமைத்தார். "அன்பு எங்கே" ஒரு வெற்றிகரமான படம், இசை ஒரு காரணியாக இருந்தது.[2] குறிப்பாக, டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோரால் தனித்தனியாக இரண்டு பதிப்புகளில் பாடப்பட்ட டிங்கிரி டிங்கலே பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்பாடல் பைலா வகையைச் சேர்ந்தது.
1965 இல் வெளிவந்த வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தின் "ஓராயிரம் பார்வையிலே" என்ற பாடலும் மிகவும் பிரபலமான பாடலாக இருந்தது. இந்தியில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டாலும், கண்ணதாசனின் பாடல் வரிகளும், டி. எம். சௌந்தரராஜனின் மயக்கும் குரலும் இதற்கு தமிழ்ச் சுவையளித்தது.
1966 இல் வெளிவந்த வல்லவன் ஒருவன் திரைப்படத்தின் ஒரு பாடல், "பளிங்கினால் ஒரு மாளிகை" எல். ஆர். ஈசுவரி பாடும் திறமைக்கு பொருத்தமான பாடலாக இருந்தது. அவரது குரலும் வேதாவின் இசையும் இணைந்து பார்வையாளர்களை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றன.
Remove ads
பாடகர்கள்.
இவரது இசையமைப்பிற்காகப் பாடிய பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். இராஜா, திருச்சி லோகநாதன், கே. ஜே. யேசுதாஸ், டி. ஏ. மோதி, எஸ். சி. கிருஷ்ணன், ஜே. பி. சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், வி. என். சுந்தரம், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, கண்டசாலா, மொகிதீன் பேக், எடி ஜெயமன்னே, பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி, ஆர். பாலசரஸ்வதி தேவி, கே. ஜமுனா ராணி, (ராதா ஜெயலட்சுமி, பி. லீலா, ஜிக்கி, கே. ராணி, ஏ. ஜி. இரத்னமாலா, பி. வசந்தா, எம். எஸ். இராஜேஸ்வரி, மாபெல்லி பத்மேதமி, ருக்மணி தேவி, மனோரமா தேவி ஆகியோராவர்.
Remove ads
பாடலாசிரியர்கள்
இசையமைப்பாளர் வேதாவிற்கு கண்ணதாசன், சுந்தர் கண்ணன், ஏ. எல். நாராயணன், தஞ்சை என். இராமையா தாஸ், வில்லிபுத்தன், ஏ மருதகாசி, வாலி, கருணைதாசன், நல்லதம்பி, ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இசையமைத்த திரைப்படங்கள்
Remove ads
குறிப்புகள்
- எஸ்.எஸ்.வேதா (இசையமைப்பாளர்)
- Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films]. Chennai: Sivakami Publishers.
- G. Neelamegam. Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014.
- G. Neelamegam. Thiraikalanjiyam — Part 2. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition November 2016.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads