சினிமாப் பைத்தியம்
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சினிமாப் பைத்தியம் (Cinema Paithiyam) என்பது 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இது குட்டி (1971) என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[3] இப்படம் 31 சனவரி 1975 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
Remove ads
கதை
ஜெயா (ஜெயசித்ரா) ஒரு திரைப்பட இரசிகை. திரைப்படத்தின் மீது மிகுந்த மோகம் கொண்டவள். பிரபல நடிகரான ஜெய்சங்கரின் தாவிர இரசிகை. திரையில் அவர் செய்வதை எல்லாம் உண்மை என நம்புகிறாள். அவர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொள்ளுமளவுக்கு பைத்தியமாக உள்ளாள். சமூக சீர்கேட்டுக்கு திரைப்படம் ஒரு காரணம் என்று நம்புபவர் ஜெயாவின் அண்ணனான சிவலிங்கம் (மேஜர் சுந்தரராஜன்) ஒரு காவல்துறை அதிகாரியாவார். ஆனால் ஜெயாவுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து அண்ணி இலட்சுமி (சௌகார் ஜானகி) வளர்க்கிறார். தங்கை ஜெயாவை லட்சுமியின் தம்பி நடராஜுக்கு திருமணம் செய்விக்க சிவலிங்கம் விரும்புகிறார். ஆனால் அதற்கு ஜெயா உடன்படவில்லை. திரைப்படம் ஒரு மாயை என்பதை அவளுக்கு உணர்ந்து நிஜவாழ்கைக்கு ஜெயா எப்படித் திரும்புகிறாள் என்பதே கதை.
Remove ads
நடிகர்கள்
- ஜெய்சங்கர் - ஜெய்சங்கர்
- ஜெயசித்ரா - ஜெயா
- கமல்ஹாசன் - நடராஜ்[4]
- மேஜர் சுந்தரராஜன் - சிவலிங்கம்
- சௌகார் ஜானகி - லஷ்மி
- சோ ராமசாமி - ரமணி
- வி. கே. ராமசாமி - சிதம்பரம்
- எஸ். வரலட்சுமி - ஆசிரியர்
- பி. ஆர். வரலட்சுமி - கமலா[5]
- சச்சு - பாப்பா
- செந்தாமரை - செந்தாமரை
- நீலு - பாடகர்
- எஸ். என். பார்வதி - ஆசிரியர்
- டி. கே. எஸ். நடராஜன் - பூபதி
சிறப்புத் தோற்றம்
- சிவாஜி கணேசன்
- ஜெ. ஜெயலலிதா
- கே. பாலாஜி
- மனோரமா
- சி.ஐ.டி சகுந்தலா
- ஏ. பீம்சிங் (இயக்குநர்)
- பி. மாதவன் (இயக்குநர்)
- சி. வி. இராசேந்திரன் (இயக்குநர்)
Remove ads
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "என் உள்ளம் அழகான" | வாணி ஜெயராம் | கண்ணதாசன் |
2 | "நான் அறியாத" | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | "ஐ வில் செல் மை பியூட்டி" | எல். ஆர். ஈஸ்வரி |
தயாரிப்பு
இந்தப் படத்தின் கதை ம. கோ. இராமச்சந்திரனைக் குறிப்பதாகக் கருதி, இப்படத்தை இயக்கவும், நடிக்கவும் முதலில் யாரும் முன்வரவில்லை. ஆனால் இது சொல்லவேண்டிய கதை என்று முக்தா சீனிவாசன் முன்வந்தார். இந்தப் படத்தின் உட்சபட்சக் காட்சி முடிந்ததும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரை திரைப்படங்களின் மையக் கருத்து சமுதாய நலனுக்காக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதோடு படம் முடியும்.[6]
வெளியீடும் வரவேற்பும்
சினிமாப் பைத்தியம் 31 சனவரி 1975 அன்று வெளியானது.[7] கல்கியின் காந்தன் படத்தை இந்தியின் அசல் படத்துடன் ஒப்பிட்டு நேர்மறையான விமர்சனத்தைத் தந்தார்.[8] குமுதம் கமல்ஹாசன், ஜெயசித்ரா, சௌகார் ஜானகி ஆகியோரின் நடிப்பைப் பாராட்டியதுடன், அசல்படமான குட்டி இனிமையாக இருந்தது; சினிமாப் பைத்தியத்தில் அது இல்லை என்றது.[9] ஜெயசித்ரா பின்னர் ஒரு செவ்வியில், இந்தப் படம் சென்னையில் உள்ள தேவி-ஸ்ரீதேவி வளாகத்தில் 100 நாட்கள் ஓடியது என்றும், "அந்த திரையரங்க வளாகத்தில் இவ்வளவு காலம் ஓடிய முதல் தமிழ் கருப்பு வெள்ளைப் படம் இதுதான்" என்றும் கூறினார்.[10]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads