சின்ன பச்சைக்காலி
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின்ன பச்சைக்காலி (Marsh Sandpiper) என அழைக்கப்படுவது உள்ளான்களில் ஒரு சிற்றினமாகும். இது ஒரு கரையோரப் பறவையாகும்.
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ சதுப்பு மண்கொத்தி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
Remove ads
பெயர்கள்
தமிழில் :சின்ன பச்சைக்காலி
ஆங்கிலப்பெயர் :Marsh Sandpiper
அறிவியல் பெயர் :Tringa stagnatillis [2]
உடலமைப்பு
25 செ.மீ. - சாம்பல் பழுப்பு நிற உடல் கொண்ட இதன் முன் நெற்றி, கண்புருவம், தலையின் பக்கங்கள், பின்முதுகு, பிட்டம் ஆகியனவும், மார்பு, வயிறு, வாலடி ஆகியனவும் தூய வெள்ளை நிறங் கொண்டவை.
காணப்படும் பகுதிகள் ,உணவு
குளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் நீர்ப்பரப்பின் ஓரங்களிலும் நீர்தேங்கி நிற்கும் நெல்வயல்களிலும் பரவலாகக் காணலாம். சிறிது உப்பான நீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரும்பித் திரிவது. ஆகஸ்ட் இறுதியில் வரத் தொடங்கும் இவை மே முதல் வாரத்தில் திரும்பிவிடும். இனப் பெருக்கம் செய்வதில் ஈடுபடாத சில, கோடையிலும் இங்கே தங்கிவிடுகின்றன. 1962இல் கோடியக்கரையில் காலில் வளையம் அணிவிக்கப்பட்ட இரு பறவைகள் 5100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் ரஷ்யாவில் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளன. தலையும் அலகும் முழுவதும் மூழ்கும்படி நீர் பரப்பில் இறங்கி இரை தேடவும் செய்யும். சிறுநத்தை, புழு பூச்சிகள் இதன் முக்கிய உணவு எழுந்து பறக்கும் போது ச்சீ வீப், ச்சி வீப் எனக் குரல் கொடுக்கும். [3]
படங்கள்

- சின்ன பச்சைக்காலி
- பறக்கும் சின்ன பச்சைக்காலி
- இரைதேடும் சின்ன பச்சைக்காலி
- கூட்டமாக பறக்கும் சின்ன பச்சைக்காலி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads