ஜிப்ரால்ட்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம் மண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.[1]
இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின்படி ஸ்பெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.[2]
Remove ads
- ஜிப்ரால்ட்டர் 36.143°N 5.353°W இல் அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads