சியர்ட் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியர்ட் மாகாணம், (Siirt Province, துருக்கியம்: Siirt ili , Kurdish [2] ) என்பது தென்கிழக்கு துருக்கியின் மாகாணமாகும் . இந்த மாகாணம் வடக்கே பிட்லிஸ், மேற்கில் பத்மான், தென்மேற்கில் மார்டின், தெற்கே அர்னாக், கிழக்கே வான் போன்ற மகாணங்களை எல்லைகளாக கொண்டுளது. இதன் பரப்பளவு 5,406 கிமீ² ஆகும். மேலும் இதன் மொத்த மக்கள் தொகை 300,695 (2010 நிலவரப்படி) ஆகும். மாகாண தலைநகராக சியர்ட் நகரம் உள்ளது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்து மக்களாவர். [3] சியர்ட் மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அலி ஃபுவாட் அட்டிக் ஆவார். [4]
Remove ads
வரலாறு
சியாட்டின் குர்துகளை துருக்கிய மயமாக்குவதற்காக, [5] 1164 என்ற சட்டம் 1927 சூனில் நிறைவேற்றப்பட்டது. [6] இது அவசரகால நிலைமையின் கீழ் இராணுவச் சட்டத்துடன் நிர்வகிக்கும் இன்ஸ்பெக்டரேட்டுகள்-ஜெனரலை (உமுமி மெஃபெடிலிக், யுஎம்) உருவாக்கபட்டது. சியர்ட் மாகாணமானது முதல் இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் (உமுமி மெஃபெட்டிக்லிக், யுஎம்) என்று அழைக்கப்பட்டது. இதன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் குடிமை, நீதித்துறை, இராணுவ விவகாரங்கள் என பரந்த அதிகாரத்துடன் ஆட்சி செய்தார். ஹக்கரி, சியர்ட், வான், மார்டின், பிட்லிஸ், சான்லூர்பா, எலாஜிக், தியர்பாகர் ஆகிய மாகாணங்களை இந்த யுஎம் உள்ளடக்கியதாக இருந்தது. இன்ஸ்பெக்டரேட் ஜெனரல்கள் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டன. சியர்ட் மாகாணத்திற்கு நுழைவது 1965 வரை வெளிநாட்டவர்களுக்கு தடைசெய்யப்பட்டது.
1987 சூலையில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை (பி.கே.கே) எதிர்ப்பதாக அறிவிக்கப்பட்ட அவசர பிராந்தியமான ஓஹால் மாநிலத்தில் சியர்ட் மாகாணம் சேர்க்கப்பட்டது. இது சாதாரண ஒரு ஆளுநரை விட கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கபட்ட ஒரு உச்ச அதிகாரங்களைக் கொண்ட ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டது. இந்த ஆளுநருக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து முழு குடியிருப்புகளை இடமாற்றம் செய்யவும், வேறு பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. [7] 1990 திசம்பரில், பிறப்பிக்கபட்ட ஆணை எண் 430 படி, ஓஹால் மாநிலத்தின் உச்ச அதிகார ஆளுநரும், மாகாண ஆளுநர்களும் ஆணை எண் 430 இலிருந்து பெற்ற அதிகாரங்கள் காரணமாக அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எந்தவொரு சட்ட வழக்கிலிருந்தும் தங்களை காத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றனர். [8] 1999 நவம்பரில், மாகாணத்தில் அவசரகால ஆட்சி நிலை இறுதியாக முடிவுக்கு வந்தது. [9]
Remove ads
மாவட்டங்கள்
சியர்ட் மாகாணம் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- பேக்கன்
- எரு
- குர்தலான்
- பெர்வாரி
- சியர்ட்
- சிர்வான்
- டிலோ
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads