சியாம்ஜி கிருஷ்ண வர்மா

From Wikipedia, the free encyclopedia

சியாம்ஜி கிருஷ்ண வர்மா
Remove ads


சியாம்ஜி கிருஷ்ன வர்மா (Shyamji Krishna Varma) (4 அக்டோபர் 1857 – 30 மார்ச் 1930) இந்திய விடுதலைப் புரட்சியாளரும்[1], வக்கிறிஞரும், இதழியளாரும், இந்தியத் தன்னாட்சி இயக்கம், இலண்டன் இந்தியா ஹவுஸ் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் ஆங்கில மொழி மாத இதழின் ஆசிரியவரும் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் பண்டிதசியாம்ஜி கிருஷ்ண வர்மா, தாய்மொழியில் பெயர் ...
Thumb
சியாம்ஜி கிருஷ்ன வர்மா வெளியிட்ட தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் இதழ், செப்டம்பர், 1908, இலண்டன்
Thumb
கிரந்தி தீர்த்தம், சியாம்ஜி கிர்ஷ்ண வர்மா நினைவகம், இலண்டன் இந்தியா ஹவுஸ் கட்டிட மாதிரி, மாண்டவி, கட்ச் மாவட்டம், குஜராத்
Remove ads

கல்லூரி வாழ்க்கை

ஆங்கிலேய சமஸ்கிருத மொழி ஆய்வாரான மானியர் வில்லியம்ஸ் பரிந்துரையின் பேரில், சியாம்ஜி கிருஷ்ண வர்மா 25 ஏப்ரல் 1879-இல் ஆக்சுபோர்டு பால்லியோல் கல்லூரியில் இளங்கலை வகுப்பு படித்தார். 1853-இல் இளங்கலை படிப்பு முடித்தவுடன், இராயல் ஆசியாடிக் சொசைடியில் இந்தியாவில் எழுதும் முறை தோன்றிய வரலாறு எனும் தலைப்பில் உரையாற்றினார். 1861-இல் பெர்லினில் நடைபெற்ற கீழ்திசையாளர்களின் மாநாட்டில் இந்தியர்கள் சார்பாக கலந்து கொண்டார்.

1885-இல் இந்தியா திரும்பிய சியாம்ஜி கிருஷ்ண வர்மா வழக்கறிஞர் தொழில் துவக்கினார். பின்னர் இரத்லம் சமஸ்தானத்தின் தலைமை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் அப்பதவியிலிருந்து விலகி அஜ்மீரில் வழக்கறிஞர் தொழில் துவக்கினார். 1893 முதல் 1895 முடிய உதய்ப்பூர் இராச்சியத்தின் ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் ஜுனாகாத் இராச்சியத்தின் திவானாக 1897 முடிய பனிபுரிந்தார்.

Remove ads

அரசியல் நடவடிக்கைகள்

1905-இல் இந்திய விடுதலை குறித்து மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு பரப்புரைக்காக தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் மாத இதழை ஆங்கிலத்தில் வெளியிட்டார். 18 பிப்ரவரி 1905-இல் இந்தியத் தன்னாட்சி இயக்கத்தின் நிறுவ்னத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1908-இல் பிரித்தானியாவில் வாழும் இந்திய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீர்ர்கள் கூடிப்பேசுவதற்கு, இலண்டனில் இந்தியா ஹவுசை நிறுவினார்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads