சியாரா

From Wikipedia, the free encyclopedia

சியாரா
Remove ads

சியாரா (Ceará, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [siaˈɾa]) பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரமாக நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது தற்போது மக்கட்தொகைப்படி பிரேசிலின் 8வது பெரிய மாநிலமாகவும் பரப்பளவில் 17வது மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் பிரேசிலின் பல சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. இதன் தலைநகரமாக போர்த்தலேசா உள்ளது.

விரைவான உண்மைகள் சியாரா மாநிலம், நாடு ...

சியாரா என்பதன் நேரடிப் பொருள் "கிளியின் கீதம்" ஆகும். பிரேசிலின் முக்கிய எழுத்தாளரான ஓசே டெ அலென்கார், சியாரா என்பது பச்சை வண்ண நீரைக் குறிப்பதாகக் கூறுகிறார். மேலும் சிலர் இந்த கடலோர மாநிலத்தின் பெயர் நண்டு எனப் பொருள்படும் சிரியாராவிலிருந்து வந்திருக்கலாம் என்கின்றனர்.

600 கிலோமீட்டர்கள் (370 mi) நீளமுள்ள கடற்கரையால் இம்மாநிலம் புகழ்பெற்றது. தவிர இங்குள்ள மலைகளிலிருந்தும் பள்ளத்தாக்குகளிலிருந்தும் அயன மண்டல பழங்கள் கிடைக்கின்றன. தெற்கே தேசியக் காடான அராரிப்பெ உள்ளது.

Remove ads

மேற்சான்றுகள்

பிற வலைத்தளங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads