சியால்கோட் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியால்கோட் மாவட்டம் (Sialkot District) (Urdu: ضِلع سيالكوٹ), தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. சியால்கோட் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். வளமையான பாகிஸ்தான் நகரங்களில் சியால்கோட் நகரம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. சியால்கோட் இராணுவப் பாசறை 1852-இல் நிறுவப்பட்டது.
Remove ads
வரலாறு
பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட், வேத காலம் முதல் இந்தோ ஆரியர்கள் மற்றும் நாகர் இன மக்கள் வாழ்ந்த பகுதியாகும். பண்டைய பரத கண்டத்து அரச குலங்களான காம்போஜர்கள், தராதரர்கள், கேயர்கள், மாத்ரிகள், பௌரவர்கள், யௌதேயர்கள், மாளவர்கள், மற்றும் குருக்கள் சியால்கோட் உள்ளடக்கிய பஞ்சாப் பகுதிகளை ஆண்டனர்.
அகாமனிசியப் பேரரசு இப்பகுதியை கி மு 550 முதல் 330 முடிய ஆண்டது. கி மு 331-இல் பேரரசர் அலெக்சாந்தர் 50,000 வீரர்களுடன் இப்பகுதியை முற்றுகையிட்டு போர் புரிந்தார்.
சியால் கோட் பகுதி மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, குஷாணப் பேரரசு, ஹூணப் பேரரசு, ஹெப்தலைட்டுகள் மற்றும் காபூல் சாகி ஆட்சிப் பகுதியில் இருந்தது.
கஜினி முகமது கி பி 1005-இல் காபூல் சாகி மன்னர்களை வென்று சியால்கோட் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் சியால்கோட் பகுதியை தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் கீழ் இருந்தது. முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் போது சீக்கியப் பேரரசின் கீழ் சியால்கோட் இருந்தது. ஆங்கிலேய-சீக்கியப் போர்களுக்குப் பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக சியால்கோட் விளங்கியது.
1947 இந்தியப் பிரிவினையின் போது சியால்கோட் மாவட்டம் உள்ளிட்ட மேற்கு பஞ்சாப் பகுதிகள் பாகிஸ்தானின் ஆளுகைக்குள் சென்றது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
சியால்கோட் மாவட்டம் தசகா, பஸ்ரூர், சம்பிரியல் மற்றும் சியால்கோட் என நான்கு வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் 122 கிராம ஒன்றியக் குழுக்களையும், 1543 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [1][2]Tehsils & Unions in the District of Sialkot - Government of Pakistan பரணிடப்பட்டது 2012-02-09 at the வந்தவழி இயந்திரம்</ref> இம்மாவட்டம் நான்கு நகராட்சி மன்றங்களையும், ஆறு நகரப் பஞ்சாயத்துக்களையும், ஒரு இராணுவப் பாசறையும் கொண்டுள்ளது.
Remove ads
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
3,016 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சியால்கோட் மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமும், தெற்கில் குஜ்ரன்வாலா மாவட்டமும், மேற்கில் குஜராத் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.
சூன், சூலை மாதக் கோடைகாலத்தில் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் வெப்பம் பூஜ்ஜியம் 2° செல்சியஸ் வெப்பம் வரை காணப்படுகிறது. சராசரி ஆண்டு மழைப் பொழிவு 1000 மில்லி மீட்டராகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 25.82% மேலாக நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[3]
மக்கள் தொகையியல்
3016 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சியால்கோட் மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 27,23,481 ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 13,96,532 (51.28%) ஆகவும்; பெண்கள் 1326949 (48.72%) ஆகவுள்ளனர். 1981 – 1998 கால கட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 2.46% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 105.2 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 903.2 நபர்கள் வீதம் உள்ளனர். கிராமப்புற மக்கள் தொகை 20,10,152 (73.81%) ஆக உள்ளது. சராசரி எழுத்தறிவு 58.9% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 65.96%; பெண்களி எழுத்தறிவு 51.52% ஆக உள்ளது. [4]
Remove ads
பொருளாதாரம்
இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதரத்தை நம்பியுள்ளது. இம்மாவட்டத்தில் கோதுமை, நெல், கரும்பு, பார்லி, சோளம் முதலியன பயிரிடப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads