சிரம்பான் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சிரம்பான் தொடருந்து நிலையம்
Remove ads

சிரம்பான் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Seremban Railway Station; மலாய்: Stesen Keretapi Seremban; சீனம்: 芙蓉火车站) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் மாநகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். சிரம்பான் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், சிரம்பான் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.

விரைவான உண்மைகள் சிரம்பான், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 1995-ஆம் ஆண்டில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 2015 முதல், பத்துமலை கொமுட்டர் நிலையம்; புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே செல்லும் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் மூலம் இந்த தொடருந்து நிலையம் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் முன்னாள் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தின் தெற்கு முனையமாகவும் சேவை செய்தது.

Remove ads

வரலாறு

இந்த நிலையம் ஒரு காலக்கட்டத்தில் போர்டிக்சன் நகருக்காக்கான கிளைப் பாதையின் முக்கிய நிலையமாக விளங்கியது. 2008-ஆம் ஆண்டில் அந்தக் கிளைப்பாதை மூடப்படுவதற்கு முன்பு அந்த வழித்தடம் தொடருந்துகளுக்கான எரிபொருள் போக்குவரத்திற்குச் சேவை செய்தது.[1]

2022-ஆம் ஆண்டில் அந்த வழித்தடத்தில் இருந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. போர்ட் டிக்சன் கிளைப் பாதைக்கு புத்துயிர் வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன; இருப்பினும் இதுவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.[2]

மலாயா தொடருந்து நிறுவனம்

மலேசியாவின் மிகப் பழமையான நிலையஙக்ளில் ஒன்றான சிரம்பான் தொடருந்து நிலையம் 1904 - 1910-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் RM 26,000.00 செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையம் நீண்ட காலமாக பற்பல தொடருந்து நிறுவனங்களின் கீழ் சேவை செய்துள்ளது.

1948-ஆம் ஆண்டில், மலாயாவில் இயங்கிய அனைத்து தொடருந்து வழித்தடங்களையும் நிர்வகிக்கும் பொறுப்புகளை மலாயா தொடருந்து நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அப்போது மலாயா தொடருந்து நிறுவனம் (Malayan Railway); மலாயன் இரயில்வே நிர்வாகம் (Malayan Railway Administration) என அழைக்கப்பட்டது.

இந்த நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் வழியாக கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தது; அத்துடன் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.[3]

ரவாங்-சிரம்பான் வழிதடம்

6 பிப்ரவரி 1994 முதல் ஏப்ரல் 12, 1994 வரை, ரவாங் தொடங்கி சிரம்பான் வரையிலான கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையைத் தொடங்குவதற்கான திட்டத்தில், இந்த நிலையம் விரிவான மறுவடிவமைப்புகளுக்கு உள்ளானது.

எனினும், 1995-ஆம் ஆண்டில்தான் கேடிஎம் கொமுட்டர் சேவை தொடங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், அந்தச் சேவை சுங்கை காடுட் வரை நீட்டிக்கப்பட்டது. அதுவரை, இந்த நிலையம் ரவாங்-சிரம்பான் வழிதடத்தின் தெற்கு முனையமாக இருந்தது.

2015-ஆம் ஆண்டில், தென் மாநிலங்களுக்கான கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சிரம்பான் நிலையம் மீண்டும் தெற்கு முனையம் ஆனது. ஆகத் தென்கோடியின் தெற்கு முனையமாக கிம்மாஸ் மற்றும் புலாவ் செபாங் - தம்பின் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.[4]

2026-ஆம் ஆண்டில் புதியக் கட்டிடம்

இந்த நேரத்தில்தான், முன்பு இருந்த கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளுக்குப் பதிலாக, கேடிஎம் இடிஎஸ் சேவைகள் கிம்மாஸ் வரை நீட்டிக்கப்பட்டன.[5] 19 சனவரி 2024 இல், தற்போதைய சிரம்பான் நிலையத்தில் புதிய நிலையக் கட்டிடத்திற்கான கட்டுமான வேலைகள் தொடங்கின.

புதியக் கட்டிடம் 2026-ஆம் ஆண்டு சனவரி மாததிற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[6]

Remove ads

அமைவிடம்

Thumb

சிரம்பான் நிலையக் காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads