செனவாங் கொமுட்டர் நிலையம்

From Wikipedia, the free encyclopedia

செனவாங் கொமுட்டர் நிலையம்
Remove ads

செனவாங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Senawang Komuter Station; மலாய்: Stesen Komuter Senawang) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், செனவாங் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். செனவாங் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், செனவாங் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் செனவாங், பொது தகவல்கள் ...

பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 14 மே 2011-ஆம் தேதி முதல் கொமுட்டர் தொடருந்து இந்த நிலையத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.[2]

Remove ads

பொது

சிரம்பான் மற்றும் கிம்மாஸ் இடையே இரட்டை தடம் மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் கட்டப்பட்டது. மலாயா தொடருந்து நிறுவனத்தின் மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தை மின்மயமாக்கல் திட்டம் என அறியப்படுகிறது.

சிரம்பான் - கிம்மாஸ்

7 சனவரி 2008-இல், MYR 3.45 பில்லியன் மதிப்புள்ள சிரம்பான் - கிம்மாஸ் இரட்டைப் பாதை மின்மயமாக்கல் திட்டம், இந்திய நிறுவனமான இர்கான் இன்டர்நேசனல் (Ircon International) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[3]

100 கி.மீ. (62 மைல்) சிரம்பான் - சுங்கை காடுட் இரட்டைப் பாதை திட்டம் 2010-ஆம் ஆண்டிலும், கிம்மாஸ் இரட்டைப் பாதை திட்டம் 2012-ஆம் ஆண்டிலும் முடிக்க திட்டமிடப்பட்டது.[4] இந்தத் திட்டம் 30 அக்டோபர் 2013-இல் நிறைவடைந்தது.[5] [6]

சிரம்பான் 3

இந்த நிலையம் செனவாங்கிற்கு மட்டுமல்லாமல் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. சிரம்பான் மாநகரின் வெளிப்புற புறநகர்ப் பகுதிகளான பாரோய், ரகாங், பாரஸ்ட் அயிட்ஸ், தாமான் சிரம்பான் ஜெயா போன்ற பகுதிகளுக்கும் இந்த நிலையத்தின் சேவை வழங்கப்படுகிறது.

அத்துடன் வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அருகிலும் இந்த நிலையம் அமைந்துள்ளது.

Remove ads

அமைவு

Thumb

செனவாங் நிலையக் காட்சியகம்

செனவாங் நிலையக் காட்சிப் படங்கள் (2015 - 2023):

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads