சிறிய அந்தமான்

From Wikipedia, the free encyclopedia

சிறிய அந்தமான்map
Remove ads

சிறிய அந்தமான் (Little Andaman) தீவு (ஒன்கே: "கௌபொலாம்பே", Gaubolambe)அந்தமான் தீவுகளின் நான்காவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 739 கி.மீ.². அந்தமான் தீவுக்கூட்டத்தில் தென்முனையில் அமைந்திருக்கிறது. ஒன்கே என்ற பழங்குடியினர் வாழும் இத்தீவு 1957 ஆம் ஆண்டு முதல் பழங்குடி மக்களுக்கான சிறப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு அந்தமான் மாவட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த தீவு அந்தமான், நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து 88 கி.மீ. (55 மைல்) தெற்கே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: கௌபொலாம்பே, புவியியல் ...
Thumb
அந்தமான் தீவுகளின் வரைபடத்தில் சிறிய அந்தமான் தீவு சிவப்பில் காட்டப்பட்டுள்ளது.


Thumb
சிறிய அந்தமான் தீவின் செய்மதிப்படம் (1990)

தாழ்பகுதித் தீவான இதில் மழைக்காடுகள் நிறைந்திருக்கின்றன. அத்துடன் மிக அரிதான கடல் ஆமைகள் பல உள்ளன. 1960களில் இந்திய அரசு இங்குள்ள காடுகளைச் சுற்றி குடியேற்றத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் இது பின்னர் நிறுத்தப்பட்டு 2002 ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டது.

சிறிய அந்தமான் பொதுவாக பெரிய அந்தமான் தீவுக்கூட்டத்தின் ஒத்தபகுதியாகக் கருதப்படுகிறது.

Remove ads

புவியியல்

இந்த தீவு லிட்டில் அந்தமான் குழுமத்திற்கு சொந்தமானது. பெரிய அந்தமானின் ரட்லேண்ட் தீவுக் கூட்டத்தில் இருந்து டங்கன் பாதையினால் பிரிக்கப்படுகின்றது. சிறிய அந்தமான் பெரிய அந்தமானின் எதிர்முனையில் அமைந்துள்ளது. மேலும் இத்தீவில் வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. சிறிய அந்தமான் தீவின் தெற்கு முனையில் ஹட் பே கப்பல் துறையில் இருந்து 14 கி.மீ. தெற்கே சிறிய அந்தமான் கலங்கரை விளக்கம் (ரிச்சர்ட்சனின் கலங்கரை விளக்கம்) அமைந்துள்ளது.[3]

Remove ads

நிர்வாகம்

சிறிய அந்தமான் தீவு அரசியல் ரீதியாக சிறிய அந்தமான் தெஹ்சிலின் ஒரு பகுதி ஆகும்.[4]

மக்கட் தொகை

சிறிய அந்தமான் தீவு ஒன்கே பூர்வீக பழங்குடியினரின் தாயகம் ஆகும். அவர்கள் இந்த தீவை ஈகு பெலோங் என்று அழைக்கின்றனர். இங்கு வங்காளம் மற்றும் பிற இடங்களிலிருந்து குடியேறியவர்களும் வாழ்கின்றனர். 2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்த தீவின் 4 கிராமங்களில் 4,093 வீடுகளில் மக்கட் தொகை 18,823 ஆக இருந்தது. ஹட் விரிகுடாவில் முக்கிய கிராமமான குவாட்-டு-குவேஜின் அமைந்துள்ளது.

போக்குவரத்து

தீவின் கிழக்கு கடற்கரையில் ஹட் பே கப்பல் துறை அந்தமான் தீவின் நுழைவிடம் ஆகும். போர்ட் பிளேயரில் இருந்து ஹட் பே கப்பல் துறைக்கு பத்து மணி நேர பயணத்தில் படகு சேவைகள் இயங்குகின்றன. பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உலங்கு வானூர்தி சேவைகளும், கடல் விமான சேவைகளும் உண்டு. உலங்கு வானூர்தி அல்லது கடல் விமானம் மூலம் போர்ட் பிளேருக்கும் ஹட் பேவிற்கும் இடையிலான பயண நேரம் 40 நிமிடங்கள் ஆகும்.

சுற்றுலாத்துறை

சிறிய அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்கான அலைசறுக்கு, சிற்றோடைகள் வழியாக படகு சவாரி, யானை வணிக சாத்து (யானை சபாரி) என்பனவும் உண்டு. ஹட் பே ஜெட்டியில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பட்லர் பே கடற்கரையானது பவளப் பாறைகளை பார்வையிடல், உலாவல் மற்றும் பிற கடல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான கடற்கரையாகும். கடற்கரையில் தேங்காய் தோட்டத்தால் சூழப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலா குடிசைகள் கிடைக்கின்றன. ஹட் பே ஜெட்டியில் இருந்து 11 கி.மீ தூரத்தில் நேதாஜி நகர் கடற்கரை அமைந்துள்ளது.[5] ஹட் பே ஜெட்டியில் 6.5 கி.மீ தொலைவில் பசுமையான மழைக்காடுகளுக்கு நடுவில் வெள்ளை சர்ப் நீர்வீழ்ச்சி காணப்படுகிறது. மேலும் ஹட் பே ஜெட்டியில் இருந்து 25 கி.மீ தூரத்தில் காடுகளின் மத்தியில் விஸ்பர் அலை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

போர்ட் பிளேயரிலிருந்து சிறிய அந்தமான் அரசாங்க அமைப்பான தீவு வரை தொகுப்பு சுற்றுப்பயணத்தை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வனத் தோட்ட மேம்பாட்டுக் கழகம் (ANIFPDCL) நடத்துகிறது.[6] மேலும் தீவில் 30 க்கும் மேற்பட்ட யானைகளைக் கொண்டு வெள்ளை சர்ப் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள காடு வழியாக அற்புதமான யானை வணிக சாத்துகளை ஏற்பாடு செய்கிறது. நன்கு அனுபவம் வாய்ந்த யானைகள் இதற்காக ஈடுபட்டுள்ளன. ANIFPDCL கடற்கரையில் விருந்தினர் மாளிகை மற்றும் சுற்றுலா குடிசைகளை கட்டியுள்ளது. பட்லர் பே கடற்கரையின் வடக்குப் பகுதி பிரபலமான அலைச் சறுக்கு தளமாகும். மேலும் அருகில் பவளப்பாறைகளை காணலாம். இந்த நோக்கத்திற்காக  செல்லும் சுற்றுலாப் பயணிகள் தமக்கு தேவையான கடலடி சுவாச உபகரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads