சிவகங்கை தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சிவகங்கை தொடருந்து நிலையம்
Remove ads

சிவகங்கை தொடருந்து நிலையம் (Sivaganga railway station, நிலையக் குறியீடு:SVGA) இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1]

விரைவான உண்மைகள் சிவகங்கை, பொது தகவல்கள் ...
Remove ads

அமைவிடம்

சிவகங்கை தொடருந்து நிலையம் ஆனது, சிவகங்கை நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், மானாமதுரை - காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இயக்கப்படும் விரைவுத் தொடருந்துகளும் மற்றும் நீண்ட தூரம் செல்லும் விரைவுத் தொடருந்துகளும், இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.

சிவகங்கை மதுரை கோட்டத்தில் உள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்தாலும், இந்நிலையத்தில் 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையத்திற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையமான, மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் மேற்கே அமைந்துள்ளது.[2] இந்நிலையத்திற்கு தெற்கே மேலக்கொன்னக்குளம் தொடருந்து நிலையமும், வடக்கு பனங்குடி தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது.

Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads