சிவகிரி (தென்காசி)
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகிரி (Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள மருத்துவமனைகள்:
- அரசு சிவகிரி தாலுகா மருத்துவமனை
- வேல்கேர் சிறப்பு மருத்துவமனை
- வேல்கேர் மெடிகல் சென்டர்
- வேல்கேர் பிசியோதெராபி மையம்
- வேல்கேர் பார்மசி
- சுசி கிளினிக்
- சுமதி மருத்துவமனை
- சுகுந்தகுமாரி கிளினிக்
- பிரபு கிளினிக்.
சிவகிரி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
இது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 208-இல் இராஜபாளையம் தாண்டி உள்ளது. அமைந்துள்ளது. சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி தென்காசியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும்; அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் 32 கி.மீ. தொலைவிலும்; இராஜபாளையம் 20 கி.மீ. தொலைவிலும்; புளியங்குடி 18 கி.மீ. தொலவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
47 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6796 வீடுகளும், 23040 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
இடங்கள்
கல்விநிலையங்கள்
- சிவகிாி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி
- பால விநாயகா் உயா்நிலைப் பள்ளி
- விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- கமிட்டி நாடாா் உயா்நிலைப் பள்ளி
- சித்தி விநாயகா் தொடக்கப் பள்ளி
- ராஜ் நியு நா்சாி (ம) பிரைமாி பள்ளி
- எஸ்.ஆா்.பி நடுநிலைப் பள்ளி
- முத்துவீரப்பத் தேவா் தொடக்கப்பள்ளி
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தொடக்கப்பள்ளி குமாரபுரம் சிவகிரி
- சிங்கராயர் தொடக்கப்பள்ளி, சிவகிாி
கோயில்
உபயம் பறையர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ பூதைராக்கு அம்மன் திருக்கோவில் சிவகிரி
உபயம் சாம்பவர் சமுதாயம் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோவில் சிவகிரி
உபயம் பறையர் சமுதாயம் சீதாபிராட்டி அம்மன் திருக்கோவில் சிவகிரி
- திரௌபதியம்மன் கோயில்
- சிவகிரி பாலசுப்பிரமணியர் திருக்கோயில்.
- சந்தைக் கற்பக விநாயகர் ஆலயம்
- கருணை ஆனந்தா் ஆலயம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads