சிவராஜ் சந்திரன்
மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
டத்தோ சிவராஜ் சந்திரன் (Sivarraajh s/o Chandran; சீனம்: 西瓦拉吉·德兰); என்பவர் 2023 மார்ச் 23-ஆம் தேதியில் இருந்து மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகிக்கிறார்.[1]
2018 மே மாதம் தொடங்கி 2018 நவம்பர் மாதம் வரையில் பகாங் கேமரன் மலை மக்களவை தொகுதியின் (Cameron Highlands Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்தவர்.
2013 நவம்பர் தொடங்கி 2018 அக்டோபர் வரையில், பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மஇகா கட்சியின் (Malaysian Indian Congress) தேசிய உதவித் தலைவராகவும் (Vice President of MIC); தேசிய இளைஞர் பிரிவு தலைவராகவும் (Youth Chief of MIC); சேவை செய்தவர்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
சிவராஜ் சந்திரன், செப்டம்பர் 16, 1976-இல் பேராக் மாநிலத்தின் லூமுட் (Lumut, Perak) நகரில் பிறந்தவர். தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பேராக் ஈப்போ ஆண்டர்சன் பள்ளியில் (Sekolah Menengah Anderson, Ipoh) முடித்தார். பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலை (Bachelor's Hons) பட்டம் பெற்றார்.[2]
இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தையார் சந்திரன் நாகலிங்கம்; டெலிகாம் மலேசியா (Telekom Malaysia) தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பொதுத் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். அவரின் தாயார் சந்திரா கன்னியப்பன் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார்.
இவருக்கு ஸ்ரீ கணேஷ் மற்றும் காயத்ரி எனும் இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர், ஜொகூர் சிகாமட் (Segamat) நகரைச் சேர்ந்த மாலதி அண்ணாமலை என்பவரை மணந்துள்ளார். இருவரும் மலாயா பல்கலைக்கழகத்தில் (Universiti Malaya) படிக்கும் போது அறிமுகம் ஆனார்கள். பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு வசந்தராஜ்; சிவாசினி; திவ்யாசினி எனும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
சிவராஜ் அவர்களின் அரசியல் ஈடுபாடு 2004-இல் ஒரு மஇகா உறுப்பினராக இருந்த போது தொடங்கியது. பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து, 2008 முதல் 2013 வரை இவர் மஇகா இளைஞர் பகுதி செயலாளராக (MIC Youth Secretary) நியமிக்கப்பட்டார்.[3]
2013-ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் புந்தோங் மாநிலச் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் ஜசெக (Democratic Action Party) வேட்பாளர் சிவசுப்ரமணியம் ஆதிநாராயணன் (Sivasubramaniam A/L Athinarayanan) என்பவரிடம் தோல்வி அடைந்தார்.[4]
மலேசியச் சிறப்பு விவகாரத் துறை
இதனைத் தொடர்ந்து, அவர் 2013 முதல் 2018 வரை மஇகாவின் இளைஞர்ப் பகுதித் தலைவராகவும், பாரிசான் இளைஞர் பிரிவின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2011-இல், இவர் மலேசியச் சிறப்பு விவகாரத் துறை (ஆங்கிலம் Community Communications Department; மலாய்: Jabatan Komunikasi Komuniti) ஆலோசனைக் குழுவில் உறுப்பினரானார். இந்தத் துறை முந்தைய மலேசிய பாரிசான் அரசாங்கத்தின் பிரச்சாரப் பிரிவாக இருந்தது.
மந்திரி பெசார் சிறப்பு அதிகாரி
சிவராஜ் அவர்கள் மலேசிய இந்தியர்கள் தொடர்பான அரசியல் வியூகங்களை (Political Strategies Pertaining to Malaysian Indians) வகுப்பதில் மலேசியச் சிறப்பு விவகாரத் துறையின் பொது இயக்குநருக்கு உதவியாளராக இருந்தார். பின்னர் அவர் பேராக் மந்திரி பெசார் (Perak Menteri Besar) அவர்களின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[5][6]
2018-ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பகாங் கேமரன் மலை மக்களவை தொகுதியில் (Cameron Highlands Federal Constituency) போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால் அவர் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் எனும் குற்றத்திற்காக தேர்தல் நீதிமன்றத்தால் (Election Court) அவரின் தேர்தல் வெற்றி தடை செய்யப்பட்டது.[7]
Remove ads
தேர்தல் முடிவுகள்
குறிப்புகள்
- The Election Court has on the 30 November 2018, nullified Sivarraajh's election for the element of corrupted practices which had triggered the 2019 Cameron Highlands by-election.
- வேட்புமனுத் தினத்திற்குப் பிறகு பாக்காத்தான் வேட்பாளருக்கு ஆதரவாக விலகிக் கொண்டார்.
- வேட்புமனுத் தினத்திற்குப் பிறகு விலகிக் கொண்டார்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads