சிவராம் வனவிலங்கு சரணாலயம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவராம் வனவிலங்கு சரணாலயம் (Shivaram Wildlife Sanctuary) இந்தியாவின் தெலுங்காணா மாநிலத்தில் மஞ்செரியல் மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்கு காப்பகமாகும். இது மந்தானிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், பெத்தபள்ளியிலலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், கரீம்நகரிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், கோதாவரிகனியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இந்த ஆற்றுப்படுகை காடு 36.29 கி.மீ. பரப்பில் அமைந்தது; இதில் தேக்கு மற்றும் மருத மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கோதாவரி நதியிலிருந்து இந்த சதுப்புநிலப் பகுதிக்கு வரும் முதலைகளுக்குப் இச்சரணாலயம் புகலிடமாக உள்ளது. இங்கு இந்தியச் சிறுத்தைகள், தேன் கரடிகள், நீலான், புல்வாய், புள்ளிமான், மலைப்பாம்புகள் மற்றும் நீளவால் குரங்கு முதலியன காணப்படுகின்றன.[2] இச்சரணாலயத்தின் இயற் நிலப்பரப்பு சரணாலயத்திற்கு அழகு சேர்க்கிறது. கிளிகள், மயில்கள், ஹார்பி கழுகுகள், கழுகுகள் உள்ளிட்ட பறவைகளும் இங்கு வாழ்கின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads