சி. கோவிந்தராஜன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. கோவிந்தராஜன் (C. Govindarajan) (பிறப்பு 15 செப்டம்பர் 1921; இறப்பு 26 சனவரி 2008) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக நெல்லிக்குப்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டபேரவைக்கு 1967, 1977[1] மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 1986 ஆம் ஆண்டு நெல்லிகுப்பம் நகர் மன்ற தலைவராக இருந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்தார்.
Remove ads
- 1964 ஆம் ஆண்டு உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட ஸ்தாபக தலைவராக திகழ்ந்தார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads