சி. க. சிற்றம்பலம்
ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. க. சிற்றம்பலம் (பிறப்பு: அக்டோபர் 1, 1941) ஈழத்து வரலாற்றாய்வாளரும், கல்வியாளரும், எழுத்தாளரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிற்றம்பலம் யாழ்ப்பாண மாவட்டம், அராலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவிலில் வசித்து வருகிறார். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். இவரது துறை பண்டைய வரலாறும் அகழ்வாய்வும் ஆகும். இவர் யாழ்ப்பாணப் .பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும், வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பல்கலைக்கழக மானியங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
Remove ads
ஆக்கங்கள்
இவர் பண்டைய தமிழகம், யாழ்ப்பாண இராச்சியம், ஈழத்தில் இந்து சமய வரலாறு, ஈழத்துத் தமிழர்களின் தொன்மைனௌட்பட 50 இற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களையும் 35 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சிந்தனை என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியலில்
சிற்றம்பலம் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும்,[1] தமிழ் மக்கள் பேரவையின் துணைத் தலைவரும் ஆவார்.
விருதுகள்
- இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு (1993, பண்டைய தமிழகம் நூல்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads