சி. ஜெயபாரதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. ஜெயபாரதி (2 சூலை 1941 - 2 சூன் 2015) தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவந்த ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரச மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர்.
Remove ads
எழுத்துத் துறையில்
மலேசியாவின் தகவல் அமைச்சின் உதயம் இதழிலும் பின்னர் இதயம் மாத இதழிலும் இவர் பல ஆண்டுகள் சிறப்புக் கட்டுரைகளை எழுதிவந்தவர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களையும் தாம் தேடிப் பெற்ற அரிய சுவடிகளையும் தமது வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறார்.
Remove ads
இணையத்தில்
உலக அளவில் பரந்து வாழும் தமிழர்களிடையே ஏற்படும் மொழி, இலக்கிய, சமய, சங்ககாலக் கலைகள் பற்றிய சந்தேகங்களுக்கு அகத்தியர் என்ற தமது இணைய மடலாடற்குழுவின் மூலம் தெளிவான விளக்கங்களை வழங்கி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் தாம் கற்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களுக்கு விரிவான விளக்கம் தந்து பாராட்டைப் பெற்றவர்.
விருதுகள்
மலேசியாவின் மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் 13 இயக்கங்களுடன் இணைந்து செப்டம்பர் 2, 2006 இல் ஜேபி என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயபாரதி அவர்களுக்கு சுங்கைப்பட்டாணியில் "கடாரத் தமிழ்ப் பேரறிஞர் எனும் விருது வழங்கிக் கௌரவித்தனர்.
வெளியிட்ட நூல்கள்
- "இணையத்தில் ஜெய்பி" (இணையக் கட்டுரைகள், 2001)
- "நாடி ஜோதிடம்" (கட்டுரை, 2002)
மறைவு
இடையறாது தனது ஆய்வுத் தளங்களில் இயங்கி வந்த ஜெயபாரதி 02.06.2015 அன்று அதிகாலை மலேசிய மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
வெளி இணைப்புகள்
- Good quality Picture of Dr JB
- அகத்தியர் மடலாடற் குழு பரணிடப்பட்டது 2007-05-23 at the வந்தவழி இயந்திரம்
- ஜெயபாரதியின் கட்டுரைகள் இணையத்தில்
- ஜெயபாரதியின் முருகனுக்கான பக்கம்
- JAYBEE'S NOTEBOOK
- JayBee's Trident
- Kadaaramweb
- Kadaaramnet
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. ஜெயபாரதி பக்கம்
- டாக்டர் ஜெயபாரதி: ஓர் அஞ்சலி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads