சீக்ரெட் இன்வேசன் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீக்ரெட் இன்வேசன் (ஆங்கிலம்: Secret Invasion) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் சீக்ரெட் இன்வேசன்[2] என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[3] என்ற ஓடிடி தளத்திற்காக கயில் பிராட்ஸ்ட்ரீட்டு என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த தொடரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் ஸ்டுடியோஸ்[4] என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.
நடிகர் சாமுவேல் எல். ஜாக்சன்[5] திரைப்படத் தொடரில் இருந்து நிக் ப்யூரியாக[6][7] தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க, இவருடன் பென் மெண்டல்சோன் என்பவர் மீண்டும் தாலோசு என்ற கதாபாத்திரத்திலும், இவர்களுடன் கோபி ஸ்மல்டேர்ஸ், கில்லியன் சிகாட், சாமுவேல் அடெவுன்மி, டெர்மோட் முல்ரோனி, ரிச்சர்ட் டோர்மர், எமிலியா கிளார்க், ஒலிவியா கோல்மன், டான் செடில், சார்லேன் வுடார்ட், கிறிஸ்டோபர் மெக்டொனால்ட் மற்றும் கேட்டி பின்னரன் ஆகியோர்கள் நடித்துள்ளனர்.[8]
சீக்ரெட் இன்வேசன் தொடர் ஜூன் 21, 2023 அன்று திரையிடப்பட்டது, ஜூலை 26 வரை ஆறு அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் முதல் தொடர் ஆகும். இந்தத் தொடர் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, அவர்கள் ஜாக்சன் மற்றும் மெண்டல்சோனின் நடிப்பைப் பாராட்டினர், ஆனால் எழுத்து (குறிப்பாக இறுதிப் போட்டி), வேகக்கட்டுப்பாடு மற்றும் காட்சி விளைவுகள் ஆகியவற்றை விமர்சித்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads