சீசியம் ஓராக்சைடு

From Wikipedia, the free encyclopedia

சீசியம் ஓராக்சைடு
Remove ads

சீசியம் ஓராக்சைடு (Caesium monoxide) என்பது Cs2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் இருமை ஆக்சைடுகள் :Cs11O3, Cs4O, Cs7O, மற்றும் Cs2O. இருப்பதாக அறியப்படுகின்றன.[3]. சீசியம் ஆக்சைடு மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற அறுகோணப் படிகங்களாகக் காணப்படுகிறது.ஆக்சைடுகள் மற்றும் கீழாக்சைடுகள் இரண்டும் அட்ர் வண்ணங்களில் காணப்படுகின்றன[1].

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

ஒளி மின்னோடுகளில் பிம்ப அடர்விகள், வெற்றிட ஒளி இருவாய்கள், ஒளி பெருக்கிகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபடக்கருவி குழல்கள் போன்ற கருவிகளில் ஒளி மின்னோடாக அகச்சிவப்பு கதிர் சுட்டுக்குறிகளை கண்டறிய சீசியம் ஆக்சைடு பயன்படுகிறது[4]. வெள்ளிப் படலத்தின் மீதுள்ள சீசியம் ஆக்சைடு படலத்தின் மீதுள்ள சீசியம் படலம், 1929 – 1930 ஆம் ஆண்டுகளில் முதல் நவீன ஒளியுமிழ் மேற்பரப்பாகப் பயன்பட்டது என்று எல்.ஆர் கொல்லர் தெரிவிக்கிறார்.[5] இது நல்லதொரு எலக்ட்ரான் உமிழ்வியாக செயற்படுகிறது என்றாலும் இதனுடைய அதிக ஆவியழுத்தம் இதனுடைய பயன்பாட்டைக் குறைக்கிறது.[6]

Remove ads

வினைகள்

தனிம நிலை மக்னீசியம், சீசியம் ஆக்சைடை சீசியம் உலோகமாக குறைக்கிறது. மக்னீசியம் ஆக்சைடு உடன் விளை பொருளாக கிடைக்கிறது:[7][8]

Cs2O + Mg → 2Cs + MgO

நீருறிஞ்சும் தன்மையுள்ள சீசியம் ஆக்சைடு அரிப்புத்தன்மையுள்ள சீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads