சீர்காழி கோவிந்தராஜன்
இந்தியப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi Govindarajan, 19 சனவரி 1933 – 24 மார்ச்சு 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி , தஞ்சாவூர் மாவட்டம்.
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
- தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
- வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
- செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
- கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
Remove ads
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
(பட்டியல் முழுமையானதன்று)
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
- பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
- மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
- காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
- ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
- நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
- எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
- உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
- வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
- சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
- ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
- யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
- ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
Remove ads
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
- கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
- தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
- வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
- இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
- ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
Remove ads
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1980[1]
- இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads