சீழ்க்கைச்சிரவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீழ்க்கைச்சிரவி[1]அல்லது சீழ்க்கைச் சிறகி (Fulvous whistling duck – Dendrocygna bicolor) என்பது ஆழமில்லாத ஈரநிலங்களிலும் சதுப்புநிலங்களிலும் காணப்படும் ஓர் வகை உயர்ந்து மெலிந்த வாத்தாகும்[2]. இவை பல்வேறு வெப்பமண்டலப் பகுதிகளான மெக்சிகோ, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, இந்திய துணைக்கண்டம் ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தியாவில் குறிப்பாக அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன.[3] காகிநாடாவிற்குத் தெற்கே தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இராமநாதபுரம் வரை இவற்றின் இனப்பெருக்க மண்டலமாகும்[4].
Remove ads
உடல் தோற்றம்
இது 48 – 53 cm மொத்த நீளமும் நீண்ட பழுப்பு நிற அலகும் உடையது. கருஞ்சிவப்பு மஞ்சள் நிறத் தலை மற்றும் கழுத்துடனும் நன்கு கருத்த கோடு பின்புற கழுத்திலும் கழுத்தில் கருமை நிற கீற்றுகளும் இவ்வாத்தை இனங்காண உதவும் களக் குறிப்புகளாகும். மேலும் பக்கவாட்டில் தெளிவான கீற்றுகளும் மங்கிய பழுப்பு நிறத்திட்டு முன் இறக்கையிலும் வெண்மை நிறப்பட்டை வால் மேற்போர்வை இறகுகளில் காணப்படும்.[1]
வாழ்விடம்
ஆழமில்லாத ஏரிகள், நெற்பயிர் விளைநிலங்கள் மற்றும் ஈரநிலங்கள் ஆகிய இடங்களில் இவ்வாத்துகளைக் காணலாம்.
படத்தொகுப்பு
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளச்சேரி ஏரியில் சீழ்க்கைச் சிரவிகள்
- சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் சீழ்க்கைச் சிறகி வாத்துகள்

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads