சுசீந்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுசீந்திரம் (ஆங்கிலம்:Suchindram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

Remove ads
தாணுமாலையன் கோயில்
இங்கு தாணுமாலயன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் புராணகதைகள் அடங்கிய மூலிகை சிற்பங்கள், சிலைகள் இங்குள்ளன. இங்குள்ள மூலவர் பிரம்மா , விஷ்ணு. சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய ஒரே மூர்த்தியாகும். இக்கோயிலில் மார்கழி மற்றும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது
அமைவிடம்
சுசீந்திரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரமானது பழையாற்றின் கரையில் அமைந்த்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
சகி.மீ. 7.55 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,644 வீடுகளும், 13193 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.15°N 77.48°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads