சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் (Suchindram Theroor Birds Sanctuary) ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். இது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, சுசீந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் மற்றும் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். அனைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் நகருக்கு அருகில் உள்ளது. இது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் அமைந்துள்ளது. இது மத்திய ஆசியப் பறக்கும் பாதையின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால், இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும். 2002 ஆம் ஆண்டு, இப்பகுதியைப் 'பறவைகள் சரணாலயம்' என அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது.[3][4] சுசீந்திரம் குளத்தின் அமைவிடம் 8°7′30″N 77°27′30″E ஆகும். தேரூர் குளத்தின் அமைவிடம் 8°10′45″N 77°27′45″E ஆகும். இச்சரணாலயத்தின் குறியீட்டு எண் IN279 ஆகும்.[5] சரணாலயத்தின் சில பகுதிகள் 2022 முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.[1][2]



Remove ads
குளங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கில், குளங்கள் அமைந்துள்ளன. மொத்தம் 2,058 நன்னீர் குளங்கள் உள்ளன. சுசீந்திரம், தேரூர் தவிர, பறக்கை, தத்தியார் குளம், வேம்பனூர் குளம், சுங்கான்கடை குளம், புத்தேரிக் குளம், தாழக்குடி குளம் மற்றும் மணவாளக்குறிச்சி குளம் போன்றவை பறவைகளின் முக்கியமான இடங்களாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் எல்லையான குமரி மாவட்டத்தில், புலிகள் வாழும் 'காட்டுயிர்ச் சரணாலயம்' ஒன்றும் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads