சுந்தரபாண்டியபுரம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுந்தரபாண்டியபுரம்(Sundarapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை பேருராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
தென்காசி - சுரண்டை உள்வழி சாலையில் உள்ள சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும்; சுரண்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும்; சாம்பவர் வடகரையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு 1,1exp, D6, மினிபஸ் உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பாவூர்சத்திரத்தில் இருந்தும் தென்காசிக்கு சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் வழியாக திருமலைக்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
Remove ads
பேரூராட்சியின் அமைப்பு
13.18 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2532 வீடுகளும், 8988 மக்கள்தொகையும் கொண்டது.[4][5] [6]
கோயில்கள்
இங்கு ஊரின் கீழ் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மீனாட்சிசுந்தரேஷ்வரர் கோவிலும் வடமேற்கில் மிகப் பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி (பெருமாள்) கோவிலும் வட கிழக்குப் பகுதியில் குளத்தின் அருகில் ரம்மியமான சூழலில் திரிபுர சுந்தரி முப்பிடாதி (முப்பிடாரி=மூன்று பிடரி, மூன்று முகம்) அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. மேலும் கிருத்துவ ஆலயம் ஒன்று ஊரின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் குலதெய்வங்களுக்கென தனித்தனி கோவிலும் அமைத்து வழிப்பட்டு வருகின்றனர்.
Remove ads
தொழில்கள்
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளம் உள்ளது. மேலும் இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மட்பாண்டம் செய்தல், தயிர் கடைதல், மீன்பிடித்தல், கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர்.
சுற்றுலா
அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பமான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு இரண்டு பிரதான குளங்களும் சிற்றாறு எனும் ஆறும் ஒரு நீர்ப்பாசன கால்வாயும் உண்டு.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads