சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்பது விஜய் தொலைக்காட்சியில் 22 சூலை 2019 முதல் 20 மார்ச் 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்க வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2][3][4] இந்த தொடர் 20 மார்ச்சு 2021 முதல் 405 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

விரைவான உண்மைகள் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், வகை ...
Remove ads

கதைச்சுருக்கம்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தமிழரசி தனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் தாத்தாவின் அரவணைப்பில் வளர்த்து வருகின்றாள். இவள் ஒரு பள்ளி ஆசிரியரும் ஆவார். இவளுக்கும் அவளது தங்கைகளுக்கு அவர்களின் அப்பா எப்படி இறந்தார் என்ற விடயம் தெரியாமல் வளர்த்து வருகின்றனர்.

பணக்கார குடும்பத்தை சேர்த்த வேல்முருகன் சிறுவயதிலிருந்து பெற்றோரை இழந்த இவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்து வருகின்றான். யார் சொல்லையும் கேட்காத இவன் பாட்டியின் சொல்லுக்கு மட்டும் அடிபணிவான். முதல் சந்திப்பிலிருந்து எலியும் பூனையுமான வேல்முருகனுக்கும் தமிழரசிக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பாட்டி விஜயலக்ஷ்மி. இருவருக்கும் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் என்றே தெரியாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர பழைய பகை மீண்டும் வருகின்றதா? அல்லது காலமாற்றத்தில் எல்லாம் மாறியுள்ளதா என்பது தான் கதை.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

துணை கதாபாத்திரம்

  • சுபலட்சுமி - திவ்யா
  • அஸ்வந்த் திலக் - சரணவனன்
  • ஜீவிதா
  • சஹானா செட்டி[5] - நிஷா
  • சீதா அணில் - சித்ரா
  • பிரியங்கா - எழில்
  • தீபிகா - கலை
  • ஜெயலட்சுமி - ஊர்வசி
  • ஈஸ்டர்
  • நேசன் - தென்னரசு
  • பிரவீன்

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு கொன்ற வினோத் பாபு என்பவர் வேல்முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சிவகாமி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு தொலைக்காட்சி நடிகை 'தேஜஸ்வினி' என்பவர் தமிழரசி என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் தொலைக்காட்சித்துறைக்கு அறிமுகமாகிறார். நடிகை லதா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தியாயம் 221 முதல் இவருக்கு பதிலாக நடிகை நளினி நடித்துள்ளார். இவர்களுடன் அஸ்வந்த் திலக், சுபலட்சுமி, சஹானா செட்டி, தீபிகா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

நேர அட்டவணை

இந்த தொடர் 22 சூலை 2019 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு அஞ்சலி என்ற தொடருக்கு பதிலாக ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பாகி, 7 திசம்பர் 2020 முதல் 21 மார்ச் 2021 வரை பகல் 1 மணிக்கு மீண்டும் நேரம் மாற்றப்பட்டு 21 மார்ச்சு 2021 முதல் 405 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பான திகதி, நாட்கள் ...
Remove ads

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads