சுபாசு சர்க்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருத்துவர் சுபாசு சர்க்கார் (Subhas Sarkar)(பிறப்பு 25 ஆகஸ்ட் 1953) ஓர் மருத்துவரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் தொழிலால் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மேற்கு வங்காளத்தின் பாங்குராவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் தற்போது ஜூலை 7 2021 அன்று இந்திய அரசின் இணை அமைச்சராகக் கல்வி அமைச்சகத்தில் (இந்தியா) பதவியேற்றுக்கொண்டார்.[4]
Remove ads
அரசியல் வாழ்க்கை

சர்க்கார் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக பாங்குரா தொகுதியில் போட்டியிட்டு மூத்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் வங்காள அமைச்சருமான சுப்ரதா முகர்ஜியை 1 லட்சத்து வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2021 ஜூலை 8 ஆம் தேதி நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads