கல்வித் துறை அமைச்சகம் (இந்தியா)

இந்திய அரசு அமைச்சகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கல்வித் துறை அமைச்சகம் (Ministry of Education) இதற்கு முன்னால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020). புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் கல்வித் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் Ministry மேலோட்டம், அமைப்பு ...

தற்போதைய கல்வித் துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான்[3]. இணை அமைச்சர்களாக சஞ்சய் ஷாம்ராவ், இராஜ்குமார் ரஞ்சன் சிங், அன்னபூர்ணா தேவி யாதவ் மற்றும் சுபாசு சர்க்கார் உள்ளனர்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவில் கல்வி அமைச்சகம் இருந்தது. ஆனால் 1985 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அதன் பெயரை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி) என்று மாற்றினார். புதிய "தேசிய கல்வி கொள்கை 2020" உருவாக்கியபின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் கல்வித் துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது.[4]

அமைச்சகம் மேலும் இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை முதன்மை, இடைநிலை, உயர்நிலைக் கல்வி, வயது வந்தோர் கல்வி மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றைக் கையாள்கிறது. உயர்கல்வித் துறையானது பல்கலைக்கழக அளவிலான கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உதவித்தொகை போன்றவற்றைக் கையாள்கிறது.

Remove ads

படிப்பறிவு மற்றும் பள்ளிக் கல்வித் துறை,

இது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

உயர்கல்வித் துறை

மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

இந்திய கல்விக் கழகங்கள் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்படுகின்றன.

நிறுவன அமைப்பு

இந்த துறை எட்டு செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் செயற்பாடுகள் 100 க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகிறது.[5]

மேலும்:

Remove ads

அமைச்சர்கள்

தற்போதைய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ( 7 July 2021 - பதவியில் உள்ளவர்)

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
Remove ads

இணை அமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...

தேசிய கல்விநிறுவனங்களின் தரவரிசை(NIRF)

ஏப்ரல் 2016 இல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கீழ் இந்திய கல்லூரிகளின் தரவரிசைகளின் முதல் பட்டியலை வெளியிட்டது. NBA, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், UGC, Thomson Reuters, Elsevier மற்றும் INFLIBNET (Information & Library Network) மையத்தை உள்ளடக்கிய முழு தரவரிசைப் பயிற்சியும். ரேங்கிங் கட்டமைப்பு செப்டம்பர் 2015 இல் தொடங்கப்பட்டது. அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்கள் உட்பட அனைத்து 122 மத்திய-நிதி நிறுவனங்களும் முதல் சுற்று தரவரிசையில் பங்கேற்றன.

Remove ads

இவற்றையும் பார்க் க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads