சுப்ரமண்யா, கர்நாடகா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுப்ரமண்யா (Subramanya) என்பது இந்தியாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். குக்கே சுப்ரமண்யர் கோயில் இங்கு அமைந்துள்ளது. இது மங்களூரிலிருந்து சுமார் 105 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் உள்ளது. இது இரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் "குக்கே பட்டணம்" என்று பெயரிடப்பட்டது.

Remove ads
யாத்ரீக மையம்
இந்த கிராமம் சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யர் கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கான அணுகுமுறை மற்றும் ஓய்வு இடமாகும். இந்த கிராமம் குமாரதாரா ஆற்றால் சூழப்பட்டுள்ளது. குமாரதாராவின் துணை நதியான தர்ப்பன தீர்த்தம் கோயிலுக்குப் பின்னால் பாய்கிறது.
வாசகியும் பிற பாம்புகளும் சுப்பிரமண்ய கடவுளின் கீழ் சுப்ரமண்யத்தில் உள்ள குகைகளில் தஞ்சம் புகுந்தனர் என்பது நம்பிக்கை. இங்கே சுப்ரமண்யரை பாம்பாக வணங்குகிறார்கள்.[2]
Remove ads
போக்குவரத்து
மங்களூர், பெங்களூர், தர்மஸ்தலா, மைசூர் போன்றவற்றிலிருந்து குக்கே சுப்ரமண்யாவை சாலை வழியாக அடையலாம். பெங்களூரிலிருந்து வரும் பாதை ஹாசனிலிருந்து சக்லேசுபூர் பிரிவு வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பிசில் காடுகள் வழியாக இதை அடைய மற்றொரு பாதை உள்ளது. சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால் பலர் இந்த வழியைத் தவிர்க்கிறார்கள். இப்போது பிசில் பாதையை சீரமைப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.[3] இங்கிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கர்நாடக போக்குவரத்துக் கழகம் தினசரி பேருந்துகளை இயக்குகிறது. 115 கிலோமீட்டர் (71 மைல்) தொலைவில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். அருகிலுள்ள ரயில் நிலையம் மங்களூர்-பெங்களூர் ரயில் பாதையில் சுப்ரமண்யா சாலை இரயில் நிலையம் ஆகும். இது குக்கே சுப்ரமண்யாவிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் உள்ளது. பெங்களூரு மங்களூரிலிருந்து பயணிகள், விரைவு இரயில் சேவைகள் உள்ளன.
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads