சுமங்கலி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுமங்கலி என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச் 6, 2017 முதல் சூலை 13, 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி, 672 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, திவ்யா, ஐஸ்வர்யா, சுஜீத், அக்ஷிதா, ஸ்ரீ வித்யா சங்கர், தீபா, இளராசன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இது கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தைக் கூறும் ஒரு தொடர் ஆகும்.
Remove ads
கதைச்சுருக்கம்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அணுவும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷும் திருமணம் செய்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இவர்களின் வாழ்வில் நித்யா என்ற பெண்ணால் வரும் பிரச்சனைகளை தாண்டி எப்படி வாழ்வில் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதை சொல்லும் கதை தான் சுமங்கலி.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- திவ்யா (2017-2019) → ஐஸ்வர்யா (2019) - அணு / ராஜா ராஜேஸ்வரி
- சுஜீத் - சந்தோஷ்
- வர்ஷினி (2017-2019) → அக்ஷிதா (2019) - நித்தியா
- அஸ்வின் குமார் - செல்வம் (2018)
துணை கதாபாத்திரம்
- ஸ்ரீ வித்யா சங்கர் - நாகம்மா
- தீபா - பார்வதி
- இளவரசன் - வேதநாயகம்
- சுனிதா - அபி
- நவீன் குமார் - பரணி
- ஜெமினி - சங்கர பாண்டி
- சதிஷ்
- மௌரியா
- பாத்திமா
- ரேகா சுரேஷ்
- ரவி வர்மா
- துர்கா
- குட்டி ரமேஷ்
- விஷ்ணு ப்ரியா
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரை சன் நெக்ட்ஸ் என்ற ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads